ஊட்டி |
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மும்முனைப்பகுதியில் அமைந்துள்ளதுதான் நீலகிரி மலைப்பகுதி. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நீலகிரி மலைத்தொடர், இமயமலையைக் காட்டிலும் பழமையானது என கூறுகின்றனர். அதிகபட்சமாக 37.9 டிகிரி சென்டிகிரேட், குறைந்த பட்சமாக 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட குளுகுளு நீலகிரியின் இதயம்தான் "ஊட்டி". இங்கு நிலவும் சீரான சீதோஷ்ண நிலையால் உலகின் சிறந்த பதினான்கு கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக ஊட்டி விளங்குகிறது. ஊட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பார்க்கத் தகுந்த சிறப்பான இடங்கள் தாவரவியல் பூங்கா (பொட்டானிக்கல் கார்டன்) மெக் ஐவோர் என்ற ஆங்கிலேயர் வடிவமைத்த இந்த தாவரவியல் பூங்கா 1857- 1867 ஆண்டுகளில் முழுமையாக அமைத்து முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் 22 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் அழகான மலர்ச்செடிகள், அரிய வகை மரங்கள் நிறைய உள்ளன. இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் இத்தாவரவியல் பூங்காவை தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பராமரித்து வருகிறது. இங்கு மே மாதம் நடக்கும் மலர்க்கண்காட்சி சிறப்பு வாய்ந்தது. தொட்ட பெட்டா தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரமாக தொட்டபெட்டா விளங்குகிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2636 மீட்டர். மேகங்கள் நம்மைத் தழுவிச்செல்லும் தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து ஊட்டி பள்ளத்தாக்கு முழுவதையும் பார்த்து ரசிக்கலாம். கைக்கெட்டும் தூரத்தில் வானம் இருப்பது போன்ற தோற்றம் நம்மை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். படகு இல்லம் ஊட்டி படகு இல்லம் மிகவும் பிரபலமானது. இப்படகு இல்லம் 1823- 1825ம் ஆண்டுகளில் அப்போதைய ஊட்டி கலெக்டர் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. வானுயர்ந்த மரங்கள் சூழ்ந்த ஏரியில் படகு சவாரி செய்வது புத்துலகில் சஞ்சரிக்க வைக்கும். பைக்காரா அருவி ஊட்டியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது பைக்காரா அருவி. முக்குர்த்தி மலையில் உற்பத்தியாகும் பைக்காரா ஆறு காட்டு வழியாக பாய்ந்தோடி சுமார் 55 கி.மீ மற்றும் 61 கி,மீ உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. கூடவே அழகையும் கொட்டுவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பைக்காராவுக்கு வருகை தருகின்றனர். பைக்காரா அணையில் நடைபெறும் படகுசவாரியும் சிறப்பு மிக்கது. குதிரைப்பந்தைய மைதானம் இந்தியாவின் புகழ் பெற்ற குதிரைப்பந்தய மைதானங்களில் ஊட்டி குதிரைப்பந்தய மைதானமும் ஒன்று. சுமார் 2.4 கி.மீ நீளம் கொண்டது. ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் இங்கு குதிரைகளின் குளம்பொலிகள் கேட்கும். குன்னூர் லேம்ப்ஸ் ராக் ஊட்டியைப்போலவே அருகில் உள்ள குன்னூரிலும் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று லேம்ப்ஸ்ராக் என்ற காட்சி முனையாகும். இது குன்னூர் பஸ்நிலையத்தில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியையும், அழகான பள்ளத்தாக்கையும் ரசிக்கலாம். சிம்ஸ் பார்க் குன்னூர்- கோத்தகிரி ரோட்டில் இது அமைந்துள்ளது. பலவகையான அரிய தாவர வகைகள், மரங்கள், அழகான மலர்ப்படுக்கைகள் போன்றவற்றை ரசிக்கலாம். இங்கு மே மாதம் நடைபெறும் பழக்கண்காட்சி பிரசித்தம். வெலிங்டன் ராணுவக்கல்லூரி ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் வெலிங்டன் ராணுவக்கல்லூரி அமைந்துள்ளது. இதை ராணுவ நகரம் என்றே அழைக்கலாம். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. டால்பின் நோஸ் குன்னூரில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் உள்ளது டால்பின் நோஸ் காட்சி முனை. இங்கிருந்து பார்த்தால் வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டாற்போல விழும் கேதரின் அருவியின் அழகை ரசிக்கலாம். அதுவும் காலை நேரத்தில் இக்காட்சி முனைக்கு வந்தால் பரவசம்தான். கொடநாடு காட்சி முனை நீலகிரி மலையில் சிறந்த காட்சி முனையாக கருதப்படுவது கொடநாடு காட்சி முனை ஆகும். கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இக்காட்சி முனையில் இருந்து பார்த்தால் தமிழக- கர்நாடக எல்லைகள் அழகாக காட்சி அளிக்கும். முதுமலை வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் முதலில் அமைக்கப்பட்ட சரணாலயம் என்ற பெருமை முதுமலை வனவிலங்கு சரணாலயத்துக்கு உண்டு. ஊட்டியில் இருந்து 36 கி,மீ தூரத்தில் இது அமைந்துள்ளது. யானை, சிறுத்தை, புள்ளிமான் என பல வகை மிருகங்கள் பறவைகளைக் காணலாம். யானை சவாரி இங்கு சிறப்பு வாய்ந்தது. இவை தவிர கிளன் மார்கன், கல்லட்டி நீர்வீழ்ச்சி, கேத்தி வேலி வியூ, டீ மியூசியம், வேக்ஸ் மியூசியம், வெஸ்டர்ன் கேட்ச் மெண்ட், அப்பர் பவானி, லாஸ் நீர்வீழ்ச்சி என பார்க்கத்தகுந்த இடங்கள் பல உண்டு. உணவு, தங்குமிடம், போக்குவரத்து மலைப்பகுதி என்பதால் அதற்கு தகுந்தாற்போல உணவு வகைகள் கிடைக்கும். குளிரை சமாளிக்க சுடச்சுட உணவு பரிமாறப்படுவது இங்கு சிறப்பு. தங்குவதற்கு ஊட்டி, குன்னூர் பகுதிகளில் பட்ஜெட் கிளாஸ், ஹைகிளாஸ் ஓட்டல்கள் உண்டு. போக்குவரத்தை பொறுத்தவரை தரைமார்க்கமாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து மலைப்பாதை வழியாக ஊட்டியை அடைய வேண்டும். கோவையில் இருந்து ஊட்டி சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ளது. மலைப்பாதை என்பதால் பயண நேரம் சுமார் மூன்று மணி நேரம். இது தவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரயிலிலும் பயணிக்கலாம். காட்டுப்பாதை வழியாக இயற்கை அழகை ரசித்துக்கொண்டே மலைரயிலில் வருவது தனி சுகம்தான். மலைரயில் பயணம் சுமார் ஐந்து மணி நேரம். "என்னங்க. ரிலாக்ஸ் பண்ண ஒரு ரியல் இடம் கிடைச்சாச்சுன்னு துள்ளிக்குதிக்கிறீங்களா. ஜில்லுன்னு ஒரு ஊட்டி பயணத்துக்கு இப்பவே திட்டமிட்டிடுங்க". |
Saturday, 11 October 2008
ஊட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment