20.10.08 பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர் |
கேரள மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த பகுதி திருச்சூர். கேரளத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாரம்பரியப் பெருமை கொண்டது. சக்தன் தம்புரான் என அழைக்கப்பட்ட ராஜா ராம வர்மாவால் செதுக்கப்பட்ட ஊரான திருச்சூரில் ரசிக்கவும் இடங்கள் உண்டு. தரிசிக்கவும் தலங்கள் பல உண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்: திருச்சூர் என்றதும் பக்தர்களிடம் ஒரு பரவசம் ஏற்படும். "என்டே குருவாயூரப்பா..." என உதடுகள் உச்சரிக்கத் தொடங்கி விடும். காரணம், திருச்சூர் அருகே குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற ஷ்ரீகிருஷ்ணர் கோவில்தான். திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமையப் பெற்றுள்ள குருவாயூர் ஷ்ரீகிருஷ்ணன் கோவிலை குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் 33.5 மீட்டர் உயரத்துக்கு தங்கத்தகடுகள் வேயப்பட்ட கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. 13 அடுக்குகளுடன் கூடிய 7 மீட்டர் உயரம் கொண்ட தீபத்தூண் ஒன்றும் பக்தர்களை கவர்ந்து வருகிறது. கோவிலின் கருவறையில் குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். குருவாயூரப்பனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். சாவக்காடு பீச்: குருவாயூரில் தரிசிக்க குருவாயூரப்பன் கோவில் என்றால் ரசித்து மகிழ சாவக்காடு பீச் எனக்கூறலாம். விரிந்து பரந்து கிடக்கிறது சாவக்காடு கடற்கரை. இங்கு 100அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சிரமம் பார்க்காமல் 145 படிகளில் ஏறிச்சென்று மேலிருந்து பார்த்தால்...இறங்கி வர மனமிருக்காது. சாம்பல் நிறத்தில் விரிந்து கிடக்கும் கடலையும், கூட்டம் கூட்டமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தென்னைமரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே...யிருக்கலாம். பாலையூர் சர்ச்: குருவாயூரில் பாலையூர் என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ள கத்தோலிக்க சிரியன் சர்ச் பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இது புனித தாமஸால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம். இங்கு ஆண்டு தோறும் ஜுலை மாதம் கொண்டாடப்படும் விருந்து விழாவில் பல மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள். கொடுங்ஙல்லூர்: அரபிக்கடலில் பெரியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பகுதியான கொடுங்ஙல்லூர் மிகவும் பழமைவாய்ந்த ஒரு இடம். யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலநாட்டு வியாபாரிகள் வர்த்தகம் செய்த இடமாக கருதப்படுகிறது. சேரமான் ஜும்மா மசூதி: கொடுங்ஙல்லூர் பகுதியில் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் சேரமான் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இது கி.பி.629ம் நிர்மாணிக்கப்பட்ட பழமையாக மசூதி ஆகும். சாலக்குடி: திருவிதாங்கூர் நெடுங்கோட்டையை திப்புசுல்தான் முற்றுகையிட்டு தளம் அமைத்ததாக கூறப்படும் இடம்தான் சாலக்குடி. திருச்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகள், மரங்கள் சூழ்ந்த பச்சைப்பசேல் பகுதி. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிரப்பள்ளி அருவி: சாலக்குடியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி அருவி. இது பெயருக்கு ஏற்றாற்போல ச்சும்மா...அதிர வைக்கும் அருவிதான். 80 அடி உயரத்தில் இருந்து பேரிரைச்சலுடன் விழும் அருவி, அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அருவி விழுவதால் புகை மண்டலமாய் எழும் சாரல், நம் மேனியை தழுவி ஜில்லிட வைக்கிறது. இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் அதிரப்பள்ளி அருவியை சுட்டுத்தள்ளாத சினிமா காமிராக்கள் மிகமிகக் குறைவு. புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அதிரப்பள்ளி அருவி அழகுத் தாண்டவம் ஆடியிருக்கிறது. இவை தவிர திருச்சூரில் உள்ள கேரள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, திருப்ரயார் கோவில், திருவம்பாடி மற்றும் பாறமெக்காவு கோவில்கள், பீச்சி அணைக்கட்டு மற்றும் சரணாலயம், கதகளி நடனம் கற்றுத்தரும் செருதுருத்தி கேரள கலா மண்டலம் என திருச்சூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. திருச்சூர் பூரம் திருவிழா: கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவும் ஒன்று. இங்குள்ள வடக்குநாதன் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க, எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட, அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும் திருவிழா வேறெங்கிலும் காண முடியாத அரிய திருவிழா. மலையாள மாதமான மேடா மாதத்தில் (ஏப்ரல்- மே) சிறப்பு மிக்க பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. உணவு, தங்குமிடம், போக்குவரத்து: உணவு வசதிகளைப் பொறுத்தவரை திருச்சூர் பகுதியில் நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் ரயில் நிலையமும் திருச்சூரில் இருக்கிறது. திருச்சூருக்கு அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது. "திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..." |
Tuesday, 21 October 2008
பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர்
Sunday, 12 October 2008
india tamilnadu thanjavur
River Tamiraparani , Ambasamudram: Legal Sand Quarrying ?
Thiruvannaamalai Temple Tower (Tamilnadu, India)
chennai2
Suchindram Tample, Kanyakumari, TamilNadu, IN
India Kanyakumari Tamilnadu
Tiruvalluvar statue, kanyakumari, tamilnadu, IN
தமிழ்நாட்டின் தலைநகரம்
வங்காள விரிகுடா கடலோரத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினரால் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை தற்போது தமிழக அரசின் தலைமைச்செயலமாக செயல்பட்டு வருகிறது.
சென்னையின் அடையாளம். உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பது போன்ற சிறப்புக்கள் மெரீனாவுக்கு உண்டு. காலாற நடந்தால் கவிதை பாடத்தூண்டும் அழகான கடற்கரையிது. இங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள் இவர்களது சகாப்தத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது மேலும் மெரீனா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் பேலஸ், மாநிலக்கல்லூரி போன்றவை கட்டிடக்கலையை கடைவிரித்து காட்டுகிறது. மெரீனாவின் தென்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சாந்தோம் தேவாலயமும் வரலாற்றை சொல்கிறது.
உலகில் பெரிய நீதிமன்ற வளாகங்களில் சென்னை ஐகோர்ட் கட்டிடமும் ஒன்று. 1892ம் ஆண்டில் கட்டப்பட்டது. கோட்டை போன்ற அழகான இந்த சிவப்பு நிற கட்டிடம் சென்னையின் இன்னொரு அடையாளம். பாரிமுனையையையொட்டி இது அமைந்துள்ளது.
கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் ரிப்பன் என்பவரின் பெயரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் சென்னை மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பளீரென எழுந்து நிற்கும் ரிப்பன் கட்டிடம், அக்கால கட்டிடக் கலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எழும்பூரில் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம், தேசிய கலைக்கூடம், கன்னிமாரா நூலகம் ஆகியவை வியக்க வைக்கிறது. 1857ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 16-18ம் நூற்றாண்டின் கலைப்படைப்புகளை கொண்டுள்ள தேசிய கலைக்கூடம் போன்றவை பழமையை ரசிப்பவர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் விருந்தளிக்கும். பழமை வாய்ந்த மிகப்பெரிய கன்னிமாரா நூலகம் புத்தகம் வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும்.
பல்லவர் காலத்து கலைகளுக்கு காலத்தால் அழியாத சான்றாக எழுந்து நிற்பது மாமல்லபுரம். சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 7-8ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்கள் உருவாக்கிய குகைக்கோயில்கள், செதுக்கி வைத்த சிற்பங்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.
இது மட்டுமின்றி கேளிக்கை பிரியர்களுக்காக தாம்பரம், பூந்தமல்லி அருகிலும், மாமல்லபுரம் செல்லும் வழியிலும் பல கேளிக்கை பூங்காக்கள் அமைந்துள்ளன.சென்னையில் இருந்து சுமார் 36 கி,மீ தூரத்தில் இயற்கை அழகு கொட்டும் முட்டுக்காடு, சுமார் 85 கி.மீ தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவற்றுக்கும் சென்று வரலாம். வேடந்தாங்கலில் நவம்பர் முதல் மார்ச் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகளை ரசிக்கலாம்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து
சென்னை, பலவகை கலாச்சாரத்தின் தலைநகரம் என்பதால் தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் தாராளமாகவும் தரமாகவும் கிடைக்கிறது. தங்கும் வசதியைப் பொறுத்தவரை பட்ஜெட் கிளாஸ், 3ஸ்டார், 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்கள் நிறைய உள்ளன. ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் உள்ளன. கடல் வழியாகவும் வரலாம். தரைமார்க்கமாக சென்னைக்குள் வர சிறப்பான சாலை வசதிகளும் உள்ளன.
1856 ஆம் வருடம் , தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது ரெயில் நிலையம் இதுதான்.
சென்னை ரெயில் பயணம்
Saturday, 11 October 2008
முதலியார் குப்பம்- மழை படகு இல்லம்
03.12.07 முதலியார் குப்பம்- மழை படகு இல்லம் |
சுற்றுலா என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஊட்டியும், கொடைக்கானலுந்தான். மாறிமாறி இங்கே சென்றுவந்து அலுத்துப்போயிருப்பவர்கள், மேலும் புதிதுபுதிதாய் பல சுற்றுலா தலங்களுக்குச் சென்று ரசிக்கவேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு வரப்பிரசாதமாய் தமிழகஅரசு உருவாக்கியிருக்கும் ஒரு வித்யாசமான சுற்றுலாத் தளம்தான் முதலியார்குப்பம் மழைத்துளி படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் மழைத்துளி படகு இல்லம் தரும் அனுபவமோ தெவிட்டாதது. ஒரு முறை வந்துவிட்டால் திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப வரவேண்டும் என்கிற ஆவலை தூண்டிவிட்டு, அடக்கமாட்டாமல் தவிக்கவிடும் சுகானுபவம் நிறைந்தது இந்த வாசஸ்தலம். அதை அனைவரும் அறிந்து, தெரிந்து, வருகைபுரிந்து, ரசித்துப் பயனுறவேண்டுமென்கிற நன்நோக்கோடுதான் குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு கனிவோடு வழங்குகிறது. பன்னாட்டு சுற்றுலா நகரமாக மாமல்லபுரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ளது இந்த பரவசமான சுற்றுலாத்தளம். இங்கு துடுப்புப் படகுகள், மிதி படகுகள், விசைப்படகுகள், கயாக் படகுகள், அதிவேக சாகசநீர்விளையாட்டுப் படகுகள், மேற்கூரை அமைப்புடன் கூடிய விசைப்படகுகள், என விதவிதமானவகைகளில் மொத்தம் 33 படகுகள் இருக்கின்றன. பயணிகளின் வருகையில் தெரியும் ஆர்வத்தைப்பார்க்கையில்,இதன் மடங்கு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணமாகத் தெரிகிறது.வழிநெடுக இருமருங்கிலும் தெரிகிற பச்சைப்பசேலென்று ஓங்கி அடர்ந்து நிற்கும் மரங்களிடம் இதயத்தைப் பறிகொடுத்தபடி 3கிலோமீட்டர் தூரம் சென்றால் இயற்கையாக அமைந்திருக்கும் தீவு போன்ற இயற்கை சூழ்ந்த அந்த இடம் மெல்லமெல்ல கண்ணுக்குத் தோன்றும். படகு வழிப்பயணத்தில் ஒரு 15நிமிடத்தில் அந்த அற்புதமான இடத்திற்குச் சென்றுவிடலாம். கடற்கரையைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என்று அடர்ந்த மரங்கள், செடிகொடிகள்... இங்கே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விரைந்து செல்லும் இந்த இருசக்கர வாகனஅமைப்பிலான இயந்திரப் படகு மணிக்கு 80 கிலோமீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியது. இதை ஓட்டிச் செல்பவர்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் சிறப்புத் தேர்வு பெற்றவர்கள்.அதை ஓட்டுவதென்பது ரொம்ப லெகுவான விசயந்தான். வேகம் அதிகரிக்கும் விசையைத் திருகிப் பிடித்துக்கொண்டால் சமர்த்தாய் பாய்ந்து செல்லும். நிறுத்தும் விசைஎல்லாம் இதற்குக் கிடையாது. வேகத்தை கட்டுப்படுத்தும் விசையை விட்டுவிட்டால், பொறையைப் பார்த்துவிட்ட நாய்க்குட்டிபோல, அமைதியாய் நின்றுவிடும். இயற்கை சூழ்ந்திருக்கும் ரம்மியமான பீச். இங்கேயிருக்கிற மாதிரிகூடாரத்தைப்போல இங்கே பல தார்பாலின் கூடாரம் உருவாக்க இருக்கிறார்கள். அதற்குள் ஓய்வெடுக்கத்தேவையான வசதிகளும் செய்து தரப்படஇருக்கிறது. பகல் வேளையில் இங்குவந்து இந்த கடற்கரையை ரசிக்கும்போது, இடைஇடையே ஓய்வெடுப்பதற்காகத்தான் இந்த தார்பாலின் கூடாரம். குடும்பத்தோடோ, நண்பர்களோடோ, அலுவலர்களோடோ, ஒரு குழுவாக வரவிரும்பினால் ஒரு நாள் முன்னதாக சென்னை வாலாஜாசாலையில் அமைந்திருக்கும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்திலிருக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மக்கள்தொடர்பு அதிகாரி ரவி அவர்களிடம் தெரிவித்துவிட்டால், அவர்கள் இங்கே சகல ஏற்பாடுகளையும் செய்துவிடுவார்கள். இங்குவந்திருந்து உல்லாசமாக காலை முதல் மாலைவரை இங்கே கொண்டாடி புத்துணர்வோடு திரும்பிச்செல்லலாம் இங்கே இயற்கையாக தீவுபோல அமைந்துள்ள மணல்திட்டு ரம்யமானது. பச்சைப்பசேலென அடர்ந்திருக்கும் சவுக்கு,தென்னை மரங்கள் அணிவகுத்துநின்று, பயணிகளை வாருங்கள் வாருங்களென சதா ஆவலோடு வரவேற்கின்றன.ஒரு மீனின் லாவகத்தோடு படகை படகோட்டி செலுத்த, நீரை கிழித்துக்கொண்டு படகு, கத்திக்கப்பலாய் பாய்ந்து பயணிக்கிறது. மக்கள் தொடர்பு அதிகாரி ரவி, பாதுகாப்பு முறை குறித்த மாதிரி செயல்விளக்க முறைகள் பற்றித் தெரிவிக்கிறார். படகோட்டிகளே அதில் நீரை ஊற்றி நிரப்புகிறார்கள். நீர் நிரம்பியும்கூட, படகு மூழ்காமல் சென்று கொண்டிருப்பதை செயல்முறை விளக்கமாய் செய்துகாட்டுகிறார்கள். இங்குபலவிதமான படகுகள் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. படகில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு ஏற்பாடாக பயணிகளுக்கு பாதுகாப்பு கவசஉடைகள், உயிர் காக்கும் மிதவைகள், மீட்புக்குழுவோடான மீட்புப்படகு என்று இங்கே படகுப்பயணம் நூறு சதவீதம் பாதுகாப்பானதாக அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. முதலியார்குப்பத்தில் அமைந்துள்ள படகுஇல்லம் தமிழகஅரசால் 1971-ல் துவக்கப்பட்டு, படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டு இப்போது அனைவரையும் வசீகரிக்கும்வகையில் உருக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2006லிருந்து டிசம்பர் 2006 வரையில் முதலியார்குப்பம் படகுஇல்லம் ஈட்டியிருந்த வருவாயோ 3 லட்சம். ஆனால், 2007 ஏப்ரலிலிருந்து, டிசம்பர் வரை ஈட்டியிருக்கிற வருவாயோ 9.28 லட்சம். ஒரே வருடத்தில் மூன்று மடங்கிற்கும் மேலாக வருமானத்தை அதிகரித்துத்தந்திருக்கிறது. பயணிகளின் உற்சாகத்தைப் பார்க்கையில் இதன் மடங்கு இன்னும் பல பல மடங்கு அதிகரிக்கும் என்பதை இங்கே ஆர்வத்தோடு வரும் பயணிகள் திரும்பமனமில்லாமல் திரும்பும் காட்சியிலிருந்தே உறுதியாகத் தெரிகிறது. படபடத்தபடி நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாய் பறக்கும் வண்ணவண்ணகொடிகள் படகுத்துறை இங்கேயிருப்பதற்கான அடையாளமாய் கண்கவர்வண்ணத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. மேலும் பயணிகள் இங்குள்ள பாதுகாப்பு வசதிகள்பற்றிய விழிப்புணர்வு செயல்முறைவிளக்கங்கள் நேரடியாக செய்து காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இங்கே வழக்கமாக அவ்வப்போது நடத்திக்காட்டப்பட்டுவருகின்ற மிகவும் தேவையான ஒரு விசயந்தான்.இருசக்கர வாகன அமைப்பிலானஇயந்திப்படகில் செல்பவர்கள் தவறி விழுந்துவிட்டால், அவர்கள் உயிர்காக்கும் கவசஉடையின் உதவியால் எப்படி நீரின் மேல் மிதப்பார்கள் என்பதை பயிற்சியாளர்கள் நிகழ்த்திக்காட்டுகிறார்கள். மீட்புக்குழுவுடன் அங்கே சுற்றிச்சுற்றி வந்தவண்ணமிருக்கும் விரைவுப்படகு, தவறி விழுந்தவர்களை விரைந்துவந்து காப்பாற்றும் காட்சியை இப்போது செயல்வடிவமாக்கிக் காட்டுகிறார்கள். கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் உயிர்காக்கும் வளைய மிதவையைத் தூக்கிப்போட்டு, லாவகமாக இழுத்து, அவர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை செய்து காட்டுகிறார்கள். குடும்பத்தோடு பத்துப்பேர்வரை செல்லக்கூடிய மோட்டார் படகு இங்கே பல உண்டு. இதில் பயணிப்பவர்கள். இதில் பயணிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் கவிழாத விதத்திலும் இந்த மோட்டார் படகுகள் கட்டமைக்கப் பட்டிருக்கிறதென்பதை பயிற்சியாளர்கள் ஒரு பக்கமாய்சரித்தும், சாயாமல் இருப்பதை செயல்முறை விளக்கத்தோடு செய்து காண்பிக்கிறார்கள். இங்கு வருகிறவர்களிடம் பேராசிரியர் அனந்தசுப்ரமணியம் ஐ.ஐ.டி. கடற்துறை வாகனவடிவமைப்பாளர் இந்த மழைத்துளி படகுஇல்லத்தின் எதிர்காலவளர்ச்சித்திட்டங்கள் பற்றியும், இதனை எப்படி நிர்மாணித்தோம் என்பதுபற்றியும் விவரமாகச் சொல்கிறார். இங்கே வரும் பயணிகளின் விருப்பத்தை கருத்தில்கொண்டு, இங்கே வரும் பயணிகளுக்கென கழிப்பிடவசதி, குடிநீர் வசதி, சிற்றுண்டிச்சாலை வசதி, ஊர்திகளை வசதியாக நிறுத்துவதற்கு ஏதுவாக நிறுத்துமிடவசதி, தேனீர் கடை போன்ற பல வசதிகள் இங்கே செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கடற்கரையிலும் கடற்கரைஉணவுவிடுதி அமைக்கும் திட்டம், மேலே மூடப்பட்டவகையில் அமைக்கப்படும் வாகனநிறுத்தங்கள், கடற்கரையோர மணல்திட்டுகளில் சிமிண்டினால் ஆன இருக்கைகள்,படகுஇல்லத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைப்பது, என பல வசதிகள் செய்யப்படவும் இருக்கிறது. இத்தனைநேரம் விவரித்த அத்துணை காட்சிகளையும், சென்றுகழிக்க இப்போதே மனது துள்ளாட்டமிடுகிறதா.. வாருங்கள்..வாருங்கள்.. உங்களை நெஞ்சார வரவேற்கக் காத்திருக்கிறது முதலியார்குப்பம் மழைத்துளி படகுஇல்லம். |