Jun ba கிராமம், லாசா ஆற்றின் கீழ்ப்பகுதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. அழகான இயற்கை சுற்றுச்சூழலையும், காட்சிகளையும் கொண்ட இக்கிராமத்தில் ஏரிகள் அதிகம். கடந்த 300 ஆண்டுகளில், இக்கிராமவாசிகள், தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைச்சிறந்த தோல் படகு தயாரிப்பு கலை, தேசிய இன தனிச்சிறப்பியல்புடைய மாட்டு தோல் படகு ஆகியவை, பண்டைய திபெத் இன மீன்பிடிப்புப் பண்பாடுகளாக மாறியுள்ளன.
முன்பு, Jun ba கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. அப்போது, மாட்டுத் தோல் படகு தான், முக்கியமான போக்குவரத்து வசதியாக இருந்தது. தற்போது, அவை, மீன்பிடிப்பதற்கு வசதியான கருதியாக மட்டுமல்ல, நடனத்தில் பயன்படுத்தப்படும் கருவியாகவும் இருக்கின்றன. மாட்டுத் தோல் படகு நடனம், திபெத் மொழியில் குவோ சி என்று அழைக்கப்பட்டது. குவோ என்றால், மாட்டுத் தோல் படகு என்று பொருள். சி என்றால், நடனம் ஆகும். கிராமவாசிகள், படகு ஓட்டும் பாடலை பாடி, மாட்டுத் தோல் படகைக் கொண்டு நடனம் ஆடினார்கள். உள்ளூர் பழக்கவழக்கத்தின் படி, ஆண்டுதோறும் திபெத் நாட்காட்டியின் படி, மார்ச் திங்கள் மீன்பிடிப்பு விழாவில், இந்நடனங்களைக் கண்டு ரசிக்கலாம். தற்போது, மாட்டுத் தோல் படகு நடனம், ஒரு வகை பொழுதுப்போக்கு நிகழ்ச்சியாக மாறியுள்ளது. பொதுவாக, கிராமவாசிகள் பெரும்பாலான நேரத்தில், மாட்டுத் தோல் படகுகளை ஓட்டி மீன் பிடிக்கின்றனர். ஓய்வு நேரத்தில், தனிச்சிறப்பு மிக்க மாட்டுத் தோல் படகு நடனம் ஆடுகின்றனர். விருந்தோம்பல் மிக்க கிராமவாசிகள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கிணங்க, இந்நடனங்களை ஆடி மகிழ்விக்கின்றனர்.
மீன்பிடித்தொழில் தவிர, தோல் பொருட்கள் பதனீட்டுத் தொழில், இக்கிராமத்தில் வளர்ச்சியடைகிறது. இங்குள்ள மாட்டுத் தோல் சிறு படகு, பைகள், செல்லிடபேசிக்கான சிறிய உறைகள், தேயிலை பைகள் உள்ளிட்ட தோல் கலைப்பொருட்கள் மிகவும் சிறப்பானவை. திபெத் இன தனிச்சிறப்பியல்பு, மலிவான விலை ஆகியவற்றினால், இந்தத் தொல் கலைப்பொருட்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் வரவேற்கப்படுகின்றன.
முதியவரான சோனான், இந்தக் கலைப்பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடுகின்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
தோல் பைகள், செல்லிடபேசிக்கான சிறிய உறைகள் முதலியவற்றை தயாரிக்கலாம். அரசின் உதவியுடன், எமது கிராமத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாக இருப்பதால் நாங்கள் மீனவர் குடும்பத்தின் மகிழ்ச்சி எனும் சிறு ஹோட்டல் நடத்துகின்றோம். எங்களின் வாழ்க்கை நிலை, முன்பை விட நன்றாக இருக்கிறது என்றார் அவர்.
லீன்க்கா என்பது, திபெத் இன மக்களின் முக்கிய பொழுதுப்போக்காகும். திபெத் மொழியில், லீன்க்கா என்றால், பூங்கா என்று பொருள். லீன்க்கா செல்வது என்பது, பூங்கா போன்ற இடங்களில் விளையாடுவது என்று பொருள்படுகிறது. பயணிகள், Jun ba கிராமத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, லீன்க்கா நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். இதில், உள்ளூர் மீனவர்களின் தனிச்சிறப்பியல்புடைய ஆடல்பாடல் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதோடு, அவர்களுடைய பொழுதுப்போக்கு நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment