சீனாவின் பல நகரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உடையுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், பண்டைகால நகரான ஹாங்சோவின் மூலம், சீனாவின் முற்கால பண்பாட்டை உணர்ந்து கொள்ளலாமா.
2200 ஆண்டுகள் வரலாறுடைய ஹாங்சோ, சீனாவின் தென்கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. சீனர்களின் பார்வையில், இது மிக அழகான நகரமாகும். இன்று, ஹாங்சோவின் HE FANG வீதி பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் கலைமகள்.
ஹாங்சோவின் மிக புகழ்பெற்ற மலையான வூ சான் மலையின் கீழுள்ள HE FANG வீதி, ஹாங்சோவின் வரலாறு மற்றும் பண்பாட்டை நன்றாக வெளிப்படுத்தும் வீதிகளில் ஒன்றாகும். உலக வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்தின் பட்டியலில் சேரப்பட, சி ஹூ ஏரியின் விண்ணப்பத்தின் மிக முக்கிய பகுதியாகவும் இது உள்ளது.
இவ்வீதி, 460 மீட்டர் நீளமானது. 12 மீட்டர் அகலமும் கொண்டது. 880 ஆண்டுகளுக்கு முந்திய தென் சூங் வம்ச காலத்தில், ஹாங்சோ நகரம், தலைநகரமாக இருந்தது. அப்போதைய பண்பாட்டு மற்றும் பொருளாதார வர்த்தக மையமான HE FANG வீதி, கோலாகலமாக இருந்தது. தற்போது, இவ்வீதியில், சில பண்டைகால கட்டிடங்கள் தான் உள்ளன. இரு பக்கங்களிலுள்ள வீடுகளில், வணிகத்துறை, மருந்துத்துறை, நாட்டுப்புற கலைத்துறைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வீதியின் நிர்வாகக் குழுவின் அதிகாரி Shan xian ping அம்மையார் கூறியதாவது:
வேறுபட்ட பருவ காலங்களில், எமது வீதியில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் பாரம்பரிய பண்பாடும் பழக்கவழக்கங்களும் காணப்படலாம். பயணிகள் வீதியில் நடக்கின்ற போதே, பண்பாடு உள்ளிட்ட பலவற்றை உணர்ந்து கொள்ளலாம் என்றார் அவர்.
HE FANG வீதியில், சில தேனீர் கடைகள் உள்ளன. விருந்தினர்களுக்கு தேனீரை வழங்கும் சேவகர்கள், பண்டைக்கால பாணியிலான மேலாடையை அணிந்து, வெண்கலத் தேநீர் கெண்டியைக் கொண்டிருக்கின்றனர். துணி கலைப்பொருட்கள் கடையின் உரிமையாளர், பழைய நெசவு வசதிகளைப் பயன்படுத்தி, கைவினை நெசவுப் பொருட்களைத் தயாரிக்கின்றார். சீனியை விற்பனை செய்யும் ஆண், அலங்கார மேலாடை அணிந்து, வாடிக்கைகாரர்களை கவர்கின்றார்.
இவ்வீதியின் நுழைவாயிலில், வெண்கல மிலெ புத்தர் சிலை இருக்கிறது. அதில், நூற்றுக்கு அதிகமான குழந்தை சிலைகளும் இருக்கின்றன. இது, சமகாலத்தில் புகழ்பெற்ற வெண்கல சிற்ப கலை வல்லுனர் சூ பிங்யிவானின் படைப்பு ஆகும். பல பயணிகள் அச்சிலையுடன் நிழற்படங்கள் எடுத்துக்கொள்வதோடு, மிலெ புத்தரைப் போன்று அடிக்கடி சிரியாக இருக்க விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியில், Hu qing yu tang என்னும் மிகவும் புகழ்பெற்ற மருந்து கடை இருக்கிறது. 1874ம் ஆண்டில், அப்போதைய புகழ்பெற்ற வணிகர் Hu xun yan திறந்து வைத்த இம்மருந்து கடையின் பரப்பளப்பு, சுமார் நான்கு ஆயிரம் சதுர மீட்டராகும். சீனாவில் ஒப்பீட்டளவில் முழுமையான சிங் வம்சகாலத்தின் ஹுய் பிரிவைச் சேர்ந்த கட்டிடம் இதுவாகும்.
தலைச்சிறந்த சிறப்பியல்புகள் கொண்ட கட்டிடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, HE FANG வீதியில் சுமார் நூறுக்கு மேற்பட்ட வகைகளான சிற்றுண்டிகளைச் சாப்பிடலாம். நான்சூங் வம்சக்காலத்தின் சிற்றுண்டிகள், சந்திர கேக், தாமரை வேர்த் தண்டு மாவு முதலியவை இடம்பெறுகின்றன.
சிற்றுண்டிகளைச் சுவைத்தப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் கவனம், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்படுகிறது. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, இவ்வீதியில் காணப்படும் காட்சிகளில் ஒன்றாகும். சீனிச் சிலையைத் தயாரிக்கின்றநரான முதியோர் Ji changyiக்கு, 75 வயதாகிறது. அவர் ஓய்வு பெற்றுள்ளார். HE FANG வீதியின் நிர்வாகக் குழுவின் தலைவர், சீனிச் சிலைகள் தயாரித்து, காட்சிக்கு வைக்க, அவருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது:
நான் குழந்தை பருவ காலத்திலிருந்து சீனிச்சிலையைத் தயாரிக்கத் துவங்கினேன். நூற்றுக்கணக்கான வகை வடிவங்களை, இதில், தயாரிக்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல, வெளிநாட்டவரும் இதை விரும்பி வாங்குகின்றனர் என்றார் அவர்.
Saturday, 19 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment