Wednesday 30 April 2008

சீன புத்தாயிரம் ஆண்டு நினைவகம் (ஆ)

சீன புத்தாயிரம் ஆண்டு நினைவகத்தின் பிரதானக் கட்டிடத்தின் நிலத்தடியில் இரண்டு மாடிகளும், தரையில் மூன்று மாடிகளும் இருக்கின்றன. அதன் உயரம், 39 மீட்டராகும். அதன் விட்டம் 85 மீட்டராகும். அசையாத ஊடுவழி மற்றும் சுழலக்கூடிய கோயிலால் இது கட்டியமைக்கப்பட்டது. இக்கோயிலின் எடை, 3200 டன்னாகும். அது, உலகில் மிகப் பெரிய, எடை கொண்ட சுழல இயலும் கோயிலாகும்.

இக்கோயிலின் நடுவில், ஒரு வட்ட வடிவமான மேடை இருக்கிறது. இம்மேடையின் விட்டம், 14 மீட்டராகும். அதில், பல பெரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. அங்குள்ள படிகளில், ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

பிரதானக் கட்டிடத்தின் முதலாவது மாடியின் நடுப்பகுதி, புத்தாயிரம் ஆண்டு மண்டபமாகும். அங்கு, சீனத் தேசத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் வளர்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது.

இரண்டாவது மாடியிலுள்ள வளைய வடிவமான கலை மண்டபத்தில், உலகில் மிக முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் சாதனங்கள் இருக்கின்றன. இவ்விடம், உலகின் பல்வேறு பிரதேசங்களின் தலைசிறந்த கலைப் பொருட்கள் பெய்ஜிங்கில் காட்சிக்கு வைக்கப்படும் இடமாக மாறியது.

இப்பிரதான கட்டமைப்பிலுள்ள கிழக்குப் பகுதியில், புத்தாயிரமாண்டு மணி சதுக்கம் உள்ளது. சீன புத்தாயிரமாண்டு மணி, இங்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெண்கல மணியின் எடை, 50 டன். உயரம், 6.8 மீட்டராகும். அதன் கீழ் பகுதியின் விட்டம் 3.38 மீட்டராகும்.

இப்பிரதான கட்டமைப்பிலுள்ள மேற்குப் பகுதியில், நாட்டுப் பண் சதுக்கம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

No comments: