மீன்பிடி கிராமங்களை, கடலோர பிரதேசங்களில் பார்க்கலாம் என்று பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கருதுகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், லாசாவின் புறநகரில் அமைந்துள்ள மீன்பிடிக்கிராமத்தைப் பற்றி அறிய இருக்கின்றீர்கள்.
Jun ba கிராமம், லாசா ஆற்றின் கீழ்ப்பகுதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. அழகான இயற்கை சுற்றுச்சூழலையும், காட்சிகளையும் கொண்ட இக்கிராமத்தில் ஏரிகள் அதிகம். கடந்த 300 ஆண்டுகளில், இக்கிராமவாசிகள், தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைச்சிறந்த தோல் படகு தயாரிப்பு கலை, தேசிய இன தனிச்சிறப்பியல்புடைய மாட்டு தோல் படகு ஆகியவை, பண்டைய திபெத் இன மீன்பிடிப்புப் பண்பாடுகளாக மாறியுள்ளன.
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரேதசத்தில் உள்ள ஒரேயொரு மீன்பிடிக்கிராம், இதுவாகும். திபெத்தில் நீர் குறைவு என்ற இயற்கையான காரணியை தவிர, பெரும்பாலான திபெத் மக்கள் மீன்கள் உண்பதில்லை என்பது, மீன்பிடித்தல் வளராமல் உள்ளதற்கு, மற்றொரு முக்கிய காரணமாகும்.
மீன் உண்ணும் பழக்கவழக்கம், புத மதத்தால், தடுக்கப்பட்டுள்ளது. திபெத்தில் ஏரிகள், புனித ஏரிகளாக அழைக்கப்படுகின்றன. ஏரிகளில் குளிப்பது அல்லது அதன் மீன்களை உண்பது, புனித ஏரிகளை அசுத்தப்படுத்தும் செயல்பாடுகளாகும். Jun ba கிராமவாசிகள், மீன்பிடித் தொழில் பாரம்பரியத்தைக் கொள்வதற்கான காரணம் என்ன, தெரியுமா? உள்ளூர் செவிவழி கதைகளின் படி, அவர்கள் மீன் பிடித்து உண்பதற்கு, தெய்வத்தின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, நம்பப்படுகிறது. முதியவரான சோனான் இந்தக்கதை பற்றி கூறியதாவது:
மீன்வகைகளின் வேகமான வளர்ச்சியினால், ஏரிகளில், மிக அதிகமான மீன்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பல மீன்கள், இறக்கைகளை வளர்த்து கொண்டு, வானில் பறந்து, புதிய வாழ்வு இடங்களைத் தேடின. படிப்படியாக, இறக்கைகளை வளர்த்துக் கொள்ளும் மீன் வகைகள், சூரியன் மற்றும் சந்திரனை மறைக்கும் அளவுக்கு மேன்மேலும் அதிகமாகின. உயிரின வகைகள், சூரிய ஒளிக் கிடைக்காததால், வாட தொடங்கின. இந்நிலைமையை தெய்வம் கண்ட பிறகு, Jun ba கிராமவாசிகளுக்கு, மீன்பிடித்து உண்பதற்கு அனுமதி அளித்தாராம். இதனால், இங்கு மீன்பிடித் தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. கிராமவாசிகள் அனைவரும், மீன்பிடித்து உண்ணும் பழக்கவழக்கத்தை கொண்டுள்ளனர் என்றார் அவர்.
யாருசாம்பு ஆறும் லாசா ஆறும் சங்கமிக்கும் பகுதியில் Jun ba கிராமம், அமைந்துள்ளதால், இங்கு மீன் வகைகள் மிகவும் அதிகம். நீண்டகாலமாக மீன்கள் உண்டுவருவதால், மீன் வறுவல் பலவிதமாக செய்ய, கிராமவாசிகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கும் போது, பாரம்பரிய திபெத் இன உணவு வெண்ணெய் தேனீர், சான்பா என்னும் மாவு உணவுப்பொருள் ஆகியவற்றைச் சுவைப்பதோடு, பல்வேறு மீன் வறுவல்களையும் சாப்பிடலாம். Jun ba கிராமக் குழுத் தலைவர் பாசூ அறிமுகப்படுத்தியதாவது:
இங்கு மீன்களைச் சமைக்கும் வறுவல் வகைகள், மிகவும் அதிகம். பல்வகை மீன் வறுவல்கள் இருக்கின்றன என்றார் அவர்.
Jun ba கிராமவாசிகளின் உற்பத்தியும் வாழ்க்கையும், மீன்பிடித் தொழிலைச் சுற்றியே இருக்கின்றன. அவர்களின் பொழுதுப்போக்கு கூட, மீன்பிடி தொழிலுடன் தொடர்புடையது. Jun ba கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் வெளியேயும், மாட்டு தோல் படகு வைக்கப்பட்டுள்ளதை, பயணிகள் காண முடியும்.
Saturday, 19 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment