Saturday, 19 April 2008

சின்சியாங்கின் குளிர்காலத்தின் காட்சியைப் பாருங்கள்

2008ம் ஆண்டின் முதலாவது பனிப் பொழிவினால், சின்சியாங்கின் தலைநகரான உருமுச்சியில் எங்கெங்கும் வெள்ளிக்காட்சியைக் காணலாம். இந்தச் சிறந்த மூலவளத்தைப் போதிய அளவில் பயன்படுத்தி, பனிச் சுற்றுலா சின்னத்தை உருவாக்கும் பொருட்டு, உருமுச்சி, பட்டுப் பாதை பனி விழாவை நடத்தியது. நகரின் மேயர் நாயிமு யாசன் விருந்தினர்களுக்கு வரவேற்பைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நடப்புப் பனி விழாவில், தலைச்சிறந்த சுற்றுலா உற்பத்தி பொருட்களையும் சேவையையும் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகளுக்கு இன்பமான நினைவை வழங்கி, தாய்நாட்டுக்கும் உலகிற்கும் சின்சியாங்கின் இணக்கமான செழுமையான புகழை எடுத்துக்காட்ட வேண்டும் என்றார் அவர்.


நீளமான குளிர்காலம், சின்சியாங்கின் உருமுச்சி நகரத்துக்கு செழிப்பான பனிச் சுற்றுலா மூலவளத்தை வழங்கியுள்ளது. மென்மேலும் அதிகமானோர் குளிர்காலத்தில் வெளியே சென்று, பசுமையான காற்றை சுவாசிக்க விரும்புகின்றனர். இவ்வாண்டின் புத்தாண்டும், இஸ்லாமிய பாரம்பரிய விழாவான குர்பான் விழாவும் ஒரே காலத்தில் கொண்டாடப்பட்டதால், சின்சியாங்கின் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்தது. உருமுச்சியின் பட்டுப்பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடல் முதலிய பனிச்சறுக்கல் திடல்களுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை, சாதாரண நாட்களில் இருந்ததை விட 4 அல்லது 5 மடங்கு அதிகமாகும். ஏராளமான பயணிகளைப் பார்த்து, XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடலின் வர்த்தகப் பிரிவின் தலைவர் XU XIA மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:
புத்தாண்டில், எமது பனிச்சறுக்கல் திடல், புதிய சாதனையைப் பெற்றுள்ளது. குர்பான் விழாக் காலத்தில், 3000 பயணிகள் இங்கு வந்து தங்கினர். வாகன தங்கும் இடத்திலும் 8 பனிச்சறுக்கல் பாதைகளிலும் அதிக பயணிகள் எண்ணிக்கையால் நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டிலும், 300 பயணிகள் இங்கே வந்து விளையாடினர் என்றார் அவர்.
உருமுச்சி நகரத்தின் HONG SHAN பூங்காவில், பெய்ஜிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தின் மாதிரியாக தயாரிக்கப்பட்ட 6 மீட்டர் உயரமும் 10 மீட்டர் நீளமும் கொண்ட, பெரிய பனிக் கட்டிச் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பனி விழாக் காலத்தில், பெரிய ரக அரண்மனை விளக்கு கலைக் கண்காட்சியும், பனிக் கட்டிச் சிற்பப் படைப்புக் கண்காட்சியும் தொடங்கியுள்ளன.

இந்த பனிக் கட்டிச் சிற்பக் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 160 படைப்புகள், சின்சியாங்கின் சிறப்பான பழக்கவழக்கங்களையும் மனிதப் பண்பாட்டு வரலாற்றையும் பிரதிபலிக்கின்றன.
வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் குறுகிய காலத்துக்குள் சின்சியாங்கின் பனி உணர்வை போதிய அளவில் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, இவ்வாண்டில், உருமுச்சி நகரம், பனிச் சுற்றுலாக்கான ஐந்து சிறப்பு நெறிகளைத் திறந்து வைத்துள்ளது. இதில், காஷ், தியேன் ச்சி, துருபான் முதலிய புகழ்பெற்ற இயற்கைக் காட்சி தளங்கள் இடம்பெறுகின்றன. உள்ளூரின் தேசிய இன பழக்கவழக்கங்கள் சின்சியாங் குளிர்காலத்தின் சுற்றுலாவை வலிமையாக தூண்டியுள்ளன என்று சின்சியோங் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி CHI CHONG QING கருதினார். அவர் மேலும் கூறியதாவது:
சின்சியாங்கின் குளிர்காலச் சுற்றுலா மூலவளம் நன்றாக இருக்கிறது. இதை, தேசிய இன பழக்கவழக்கம், பட்டுப்பாதை ஆகியவற்றுடன் இணைத்து, அவற்றின் தனிச்சிறப்பியல்பையும் பண்பாட்டையும் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையை வளர்க்க முடியும் என்றார் அவர்.


2002ம் ஆண்டின் குளிர்காலத்தில் உருமுச்சி நகரத்தில் முதலாவது பட்டுப்பாதை பனி விழா நடைபெற்ற பின், சின்சியாங்கின் பனி மற்றும் தேசிய இனச் சுற்றுலா உற்பத்தி பொருட்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குளிர்காலத்தில் உருமுச்சி சென்று பனிச்சறுக்கு செய்வது, பரவலான சுற்றுலா நிகழ்ச்சியாக மாறியுள்ளது. சீனாவின் HE NAN மாநிலத்தின் வழிகாட்டி GUO CHEN அம்மையார் பேசுகையில், குளிர்காலத்தில் உருமுச்சியில் பனியை மகிழ்ச்சியாக பார்ப்பதற்கான செலவு, கோடைக்காலத்தில் இருந்ததை விட சுமார் 30 விழுக்காடு குறைவாகும். இது, மிகவும் மலிவு என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
நான், HE NAN மாநிலத்தின் ZHONG ZHOU சர்வதேசச் சுற்றுலா பணியகத்தில் வேலை செய்கின்றேன். சின்சியாங்கின் சுற்றுலாச் சந்தை நன்றாகவுள்ளது. பயணிகள் வந்து பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைந்தனர். பனிச்சறுக்கலைத் தவிர, தியேன் ச்சி, துருபான் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் பார்க்கலாம். மேம்பாடு உடையது என்று அவர் கருதினார்.
புள்ளிவிபரத்தின் படி, தற்போது, உருமுச்சியில் 30 பனிச்சறுக்கல் திடல்கள் உள்ளன. நாளுக்கு 20 ஆயிரம் பயணிகள் வருகை தருவதை ஏற்றுக்கொள்ளமுடியும். இதில் பட்டுப் பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN GOLF பனிச்சறுக்கல் திடல், TIAN SHAN சர்வதேச பனிச்சறுக்கல் திடல் உள்ளிட்ட பத்துக்கு மேலான பனிச்சறுக்கல் திடல்கள் குறிப்பிடத்தக்க அளவையும் தரத்தையும் கொண்டவை. இவ்வாண்டின் பட்டுப்பாதை பனி விழாவில், உருமுச்சிக்கு வந்து தங்கும் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்து, 10 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்படப்பட்டது.


சீனாவுக்கு வந்தால் தான், உலகின் அளவு தெரியும். உருமுச்சிக்கு சென்றால் மட்டும் தான், சின்சியாங்கின் அழகு தெரியும் என்று மக்கள் பொதுவாக கூறினர். சின்சியாங்கின் அழகான காட்சிகள், கோடைக்காலத்தில் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் காணப்படலாம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உருமுச்சி பட்டுப்பாதை பனி விழா, உலகின் பயணிகளுக்கு பல பங்கேற்பு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. இங்கே, நீங்கள், மேற்குச் சீனாவின் பனிக்காட்சியைப் பார்த்து, வண்ணமான தேசிய இன பழக்கவழக்கங்களை உணர்ந்து கொள்ளலாம்.

No comments: