Wednesday, 30 April 2008

சீன புத்தாயிரம் ஆண்டு நினைவகம் (ஆ)

சீன புத்தாயிரம் ஆண்டு நினைவகத்தின் பிரதானக் கட்டிடத்தின் நிலத்தடியில் இரண்டு மாடிகளும், தரையில் மூன்று மாடிகளும் இருக்கின்றன. அதன் உயரம், 39 மீட்டராகும். அதன் விட்டம் 85 மீட்டராகும். அசையாத ஊடுவழி மற்றும் சுழலக்கூடிய கோயிலால் இது கட்டியமைக்கப்பட்டது. இக்கோயிலின் எடை, 3200 டன்னாகும். அது, உலகில் மிகப் பெரிய, எடை கொண்ட சுழல இயலும் கோயிலாகும்.

இக்கோயிலின் நடுவில், ஒரு வட்ட வடிவமான மேடை இருக்கிறது. இம்மேடையின் விட்டம், 14 மீட்டராகும். அதில், பல பெரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. அங்குள்ள படிகளில், ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

பிரதானக் கட்டிடத்தின் முதலாவது மாடியின் நடுப்பகுதி, புத்தாயிரம் ஆண்டு மண்டபமாகும். அங்கு, சீனத் தேசத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் வளர்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது.

இரண்டாவது மாடியிலுள்ள வளைய வடிவமான கலை மண்டபத்தில், உலகில் மிக முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் சாதனங்கள் இருக்கின்றன. இவ்விடம், உலகின் பல்வேறு பிரதேசங்களின் தலைசிறந்த கலைப் பொருட்கள் பெய்ஜிங்கில் காட்சிக்கு வைக்கப்படும் இடமாக மாறியது.

இப்பிரதான கட்டமைப்பிலுள்ள கிழக்குப் பகுதியில், புத்தாயிரமாண்டு மணி சதுக்கம் உள்ளது. சீன புத்தாயிரமாண்டு மணி, இங்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெண்கல மணியின் எடை, 50 டன். உயரம், 6.8 மீட்டராகும். அதன் கீழ் பகுதியின் விட்டம் 3.38 மீட்டராகும்.

இப்பிரதான கட்டமைப்பிலுள்ள மேற்குப் பகுதியில், நாட்டுப் பண் சதுக்கம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, 22 April 2008

உயிரினப் பாதுகாப்பில் கட்டுமானத்தில் அதிக சாதனைகள் பெற்ற சீனாவின் ஹய்னான் மாநிலம் (ஆ)


கிராமப்புறங்களின் உயிரின வாழ்க்கைச்சூழலும் வசிப்பிடங்களின் நிலையும்ம் படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டின் இறதி வரை, ஹய்னான் மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கு மேலான, உயிரின வாழ்க்கைச் சூழல் நாகரிக கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சங் மாய் மாவட்டத்தின்சிங் குவிய் கிராமம், அவைகளில் ஒன்றாகும். அங்குள்ள அடர்ந்து வளரும் மரங்கள், தூய்மையான காற்று, நேர்த்தியான தோற்றம் ஆகியவை, பல நகரவாசிகள் அங்கு சுற்றுலா செய்யுமாறு கவர்ந்திழுக்கின்றன. விவசாயிகள், குடும்பத்தில் தங்கு விடுதிகளையும் உணவங்களையும் நடத்துகின்றனர்.

அரசின் ஆதரவுடன், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும், சிங் குவிய்கிராம அரசு, 6 இலட்சம் யுவான் நிதியை ஒதுக்கியுள்ளது. சுற்றுச்சூழல் சீராகி, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி, விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது என்று இக்கிராமத்தின் விவசாயை Wanglifen அம்மையார் கூறினார்.

பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணியர்கள் மிக அதிகம். நாகரிகமான உயிரினச் வாழ்க்கை சுற்றுச் சூழல் கிராமங்களைப் பார்வையிட்டு, தனிச்சிறப்பு வாய்ந்த கடல் சார் உணவுகளைச் சாப்பிட்டு, எங்கள் வாழக்கையை அறிந்து கொள்கின்றனர். இது, எங்களுக்கு அதிக நலன்களைக் கொண்டு வருகிறது. உயிரின சூழல் கிராமங்களைக் கட்டியமைத்த பின், முன்பை விட, எங்கள் வாழக்கைத் தரம் மேலும் நன்றாகியுள்ளது. சுற்றுச்சூழலும் சீராகியுள்ளது என்றார் அவர்.

சுற்றுலாத் தொழில், ஹய்னான் மாநிலத்தின் முக்கிய தொழிலாகும். உயிரின வாழ்க்கைச் சூழல்சுற்றுச்சூழல், ஹய்னான் சுற்றுலா தொழில் வளர்வதன் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் உள்ளது என்று ஹய்னானின் சுற்றுலா பணியகத்தின் தலைவர்சாங் ச்சி கருதுகிறார்.

உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல், சர்வதேச சுற்றுலா துறையில், மிகப் பெரிய போட்டி திறன் உடையது. நாங்கள், மாசுபடாத சுற்றுலா வகைகளை உருவாக்கி வருகிறோம். எடுத்துக்காட்டாக, வெப்ப மண்டல காட்டு பயணம், கடல் பயணம், ஆய்வுப் பயணம், வெந்நீர் ஊற்று பயணம் முதலியவை, இயற்கையான சுற்றுலா வகைகளாகும். கடல் மாசுபட்டால், யாரும் ஹய்னானுக்கு வர மாட்டார்கள். அதனால் நாங்கள் முழு மூச்சுடன் இங்குள்ள உயிரின பாதுகாப்பில் முழு மூச்சுடன் பங்கேற்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஹய்னான் தொழில் நிறுவனங்களின் பொதுக் கருத்தமாக மாறியுள்ளது. கடல் பாதுகாப்புக்கான நீல பட்டு நாடா நடவடிக்கை என்ற முன்மொழிவை சில ஒட்டல்கள் முன்வைத்தன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், கடலோரப் பகுதியிலான குப்பைகளை ஒட்டல்களுக்கு கொண்டு சென்று கையாள வேண்டுமென்றும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டுமென்றும் பயணியர்களை இந்த ஒட்டல்கள் கோருகின்றன.

இயற்கை பாதுகாப்புப் பிரதேசங்கள், உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் செயல்திறன் மண்டலம், முக்கிய நீர் தோற்றுவாய் கடல் பரப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும், ஹய்னான் மாநிலம் தொடர்ந்து வலுப்படுத்தும். காட்டு பரவல் விகிதத்தை மேலும் உயர்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலான ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று ஹய்னான் மாநிலத்தின் திட்டங்கள் வெளிப்படுத்தின.

நேயர்கள், இது வரை, உயிரின பாதுகாப்பில் அதிக சாதனைகள் பெற்ற சீனாவின் ஹய்னான் மாநிலம் பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

Saturday, 19 April 2008

அற்புதமான அழகான சந்திர ஏரி

மங்கோலிய மொழியில், டான்கோலி, வான் என்ற பொருளாகும். தாலேய், ஏரி என்ற பொருளாகும். இதனால் இந்த ஏரியின் பெயருக்கு, வானிலான கடலை ஒட்டியமையும் அழகான ஏரி என்று பொருளாக இருக்கிறது.


புதுச்சிக் என்பவர், முன்பு ஆசிரியராக வேலை செய்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அவர், சந்திரஏரி இயற்கைக்காட்சி மண்டலத்துக்குச் சென்று வேலை செய்கிறார். விருந்தினர்கள் இங்கே வரும் போது, புதுச்சிக்குும் வேறு ஆயர்களும் பாடல் பாட்டி, ஹாடாவையும் மதுவையும் வழங்குவர். புதுச்சிக், எமது செய்தியாளரிடம் கூறியதாவது:
நான் இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு மேல், வேலை செய்துள்ளேன். என் பணி, நன்றாக இருக்கிறது. ஒருப்புறம், குடும்பத்துக்கு வருமானத்தை அதிகரிக்கலாம். மறுப்புறம், நான், உரக்கப்பாடும் போது, மகிழ்ச்சியடைகின்றேன். நாங்கள் பாடிய வரவேற்பு பாடலைக் கேட்டதும், விருந்தினர்கள் சிலர் இணைந்து பாடுவர், சிலர் ஆடல் நடனமாடுவர். எனது வேலை மூலம், அலசான் மக்களின் பேரூக்கத்தை விருந்தினர்கள் உணர்ந்து கொண்டு, இப்பிரதேசத்தின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ள முடியும். இதனால், எனக்கு இந்த வேலையை மிகவும் பிடிக்கிறது. மங்கோலிய பாடல்களை மேலும் அதிகமானோருக்குப் பாட விரும்புகின்றேன் என்றார் அவர்.


உள்ளூர் மக்களின் பேரூக்கத்தை உணர்ந்த பிறகு, எமது செய்தியாளர்கள், சந்திரஏரி இயற்கைக்காட்சி மண்டலத்தில் நுழைந்தனர். இங்கே தங்கி வரும் பயணிகள், மனிதரும் இயற்கையுடன் இணக்கமாக இருக்கும் அழகான காட்சியைப் பாராட்டுகின்றனர்.
நிங்சியா குவே தன்னாட்சி பிரதேசத்தின் பயணியர் ஒருவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:


இங்கே மிகவும் அழகானது. வழமையாக, பணிச்சுமை மிகவும் அதிகமானதால், சனி ஞாயிறு இரு நாட்களில் தான், இங்கே வர முடியும். இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ஒட்டகம் மீது சவாரி செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஒடக்கம் மீது ஏறிச்செல்வது என்பது, உள்ளூர் சுற்றுலாவின் தனிச்சிறப்பியல்பு ஆகும். அலாசன், புகழ்பெற்ற ஒட்டக ஊராக அழைக்கப்பட்டது. சென் பூர் என்பவர், இந்த இயற்கைக்காட்சி மண்டலத்தில் ஓட்டகத்தை வளர்ப்பவர்களில் ஒருவராவார். முன்பு அவர், உள்ளூரின் ஒரு ஆயர். இவ்வியற்கைக்காட்சி மண்டலம் கட்டியமைக்கப்படத் தொடங்கிய போது, அவர் குடும்பமும், மற்றொரு குடும்பத்துடன், தொடர்ந்து தங்கியிருந்து, உடன்படிக்கையின் படி, இங்குள்ள அனைத்து ஒடக்கங்களையும் வளர்க்கும் பணிக்குப் பொறுப்பேற்றது. அவர் கூறியதாவது:


எமது வீடு, இந்த ஏரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டுதோறும் மே திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, எங்கள் இரு குடும்பங்கள் ஒடக்கங்களுடன், இங்கு வந்து, வேலை செய்கின்றோம். வேறு நேரத்தில், நாங்கள் மேய்ச்சல் பிரதேசத்தில் வாழ்கின்றோம். துவக்கத்தில் எங்களுக்கு 5 அல்லது 6 ஒடக்கங்கள் மட்டும் உண்டு. தற்போது, இக்காட்சி மண்டலத்தின் ஆதரவுடன், ஒட்டகங்களின் எண்ணிக்கை, 30க்கு மேலாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு, பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். எங்கள் நல்ல வருமானம் கிடைக்கிறது, வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

சென்னூங்சியா இயற்கைக் காடு

சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹுபெய் மாநிலத்தில், சென்னூங்சியா என்னும் புகழ்பெற்ற இயற்கைக் காடு உள்ளது. மனித நடமாட்டம் இல்லாததால், இங்குள்ள இயற்கைச் சூழ்நிலை சீராக இருக்கிறது. மேலும், சீனாவின் முக்கிய வன விலங்கு மற்றும் தாவர மூலவளக் கருவூலமாக இக்காடு மாறியுள்ளது. இன்று, இந்த வன பாதுகாப்பு மண்டலம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.


கடந்த சில ஆண்டுகளில், இங்கு 4 பெரிய சுற்றுலா காட்சியகங்கள், நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதி்ல, Mu yu வட்டம், பயணிகள் மிகவும் அதிகமாக வருகை தரும் இடமாகும். இவ்வட்டத்தில் பெரும்பாலான நகரவாசிகள், சுற்றுலாவுடன் தொடர்புடைய வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். Mu yu வட்டத்திலுள்ள சென்னூங்சியா மலை பண்ணைத் தோட்டம் என்ற ஹோட்டலின் உரிமையாளர் Li shi kai கூறியதாவது:
இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, சென்னூங்சியாவின் நிலைமை மேன்மேலும் சீராகியுள்ளது. குறிப்பாக, கோடைக்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகியுள்ளது. இதனால், கடன் வாங்கி, இந்த ஹோட்டலை நடத்துகின்றேன். கடந்த சில ஆண்டுகளில் எங்களின் வருமானம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றார் அவர்.


சுற்றுலாத் துறையின் வளர்ச்சியினால், சென்னூங்சியாவின் நகரவாசிகள்
அதிக வருமானம் பெறுகின்றனர். ஆனால், பயணிகளின் அதிகரிப்பு, காட்டு மண்டலத்தின் இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு நிர்பந்தத்தைக் கொண்டு வந்தது. அதேவேளை, சுற்றுச்சூழல், அரிய வன விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைப் பேணிகாப்பதில், உள்ளூர் அரசாங்கம் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து, திரு Qian yuan kun கூறியதாவது:
சென்னூங்சியாவின் பொருளாதார மற்றும் சமூக லட்சிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், நாங்கள் எப்பொழுதும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, முதலிடத்தில் வைத்துள்ளோம். பொருளாதார வளர்ச்சிக்கும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குமிடையிலான முரண்பாட்டை, உரிய முறையில் கையாண்டு வருகின்றோம் என்றார் அவர்.


காட்சி மண்டலத்திலுள்ள 1000க்கு மேலான வகை வன விலங்குகள் ஓய்வு செய்யவும், இயற்கைச் சூற்றுச்சூழலை சீராக சரிப்படுத்தவும், 2006ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் மார்ச் திங்கள் வரை, சென்னூங்சியா காட்டு மண்டலம் தற்காலிகமாக மூடப்பட்டது. சில ஆண்டுகளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் இந்த சரிப்படுத்தல் மூலம், காட்சி மண்டலத்திலுள்ள சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் சீரானது. வன விலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனின் Cambridge பல்கலைக்கழகம், அமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகம், மெக்சிகோவின் தாவரவியல் பூங்கா முதலியவற்றின் நிபுணர்கள் சென்னூங்சியாவைப் பார்வையிட்ட போது, இங்குள்ள பல்வகை உயிரினங்கள், மேம்பட்ட இயற்கைச் சுற்றுச்சூழல், இயற்கையான காடு ஆகியவற்றைப் பாராட்டினர்.


இது குறித்து, திரு Qian yuan kun மேலும் கூறியதாவது:
சென்னூங்சியா காட்டு மண்டலம், பயனுள்ள முறையில் பேணிகாக்கப்பட்டதோடு, அதன் ஈர்ப்பு ஆற்றல் மேன்மேலும் அதிகமாகியுள்ளது. எதிர்காலத்தில், Shen nong jia, அருமையான சுற்றுச்சூழல் கொண்டு, மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருக்கும் தாயகமாக மாறும் என்றார் அவர்.

சின்சியாங்கின் குளிர்காலத்தின் காட்சியைப் பாருங்கள்

2008ம் ஆண்டின் முதலாவது பனிப் பொழிவினால், சின்சியாங்கின் தலைநகரான உருமுச்சியில் எங்கெங்கும் வெள்ளிக்காட்சியைக் காணலாம். இந்தச் சிறந்த மூலவளத்தைப் போதிய அளவில் பயன்படுத்தி, பனிச் சுற்றுலா சின்னத்தை உருவாக்கும் பொருட்டு, உருமுச்சி, பட்டுப் பாதை பனி விழாவை நடத்தியது. நகரின் மேயர் நாயிமு யாசன் விருந்தினர்களுக்கு வரவேற்பைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நடப்புப் பனி விழாவில், தலைச்சிறந்த சுற்றுலா உற்பத்தி பொருட்களையும் சேவையையும் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகளுக்கு இன்பமான நினைவை வழங்கி, தாய்நாட்டுக்கும் உலகிற்கும் சின்சியாங்கின் இணக்கமான செழுமையான புகழை எடுத்துக்காட்ட வேண்டும் என்றார் அவர்.


நீளமான குளிர்காலம், சின்சியாங்கின் உருமுச்சி நகரத்துக்கு செழிப்பான பனிச் சுற்றுலா மூலவளத்தை வழங்கியுள்ளது. மென்மேலும் அதிகமானோர் குளிர்காலத்தில் வெளியே சென்று, பசுமையான காற்றை சுவாசிக்க விரும்புகின்றனர். இவ்வாண்டின் புத்தாண்டும், இஸ்லாமிய பாரம்பரிய விழாவான குர்பான் விழாவும் ஒரே காலத்தில் கொண்டாடப்பட்டதால், சின்சியாங்கின் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்தது. உருமுச்சியின் பட்டுப்பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடல் முதலிய பனிச்சறுக்கல் திடல்களுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை, சாதாரண நாட்களில் இருந்ததை விட 4 அல்லது 5 மடங்கு அதிகமாகும். ஏராளமான பயணிகளைப் பார்த்து, XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடலின் வர்த்தகப் பிரிவின் தலைவர் XU XIA மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:
புத்தாண்டில், எமது பனிச்சறுக்கல் திடல், புதிய சாதனையைப் பெற்றுள்ளது. குர்பான் விழாக் காலத்தில், 3000 பயணிகள் இங்கு வந்து தங்கினர். வாகன தங்கும் இடத்திலும் 8 பனிச்சறுக்கல் பாதைகளிலும் அதிக பயணிகள் எண்ணிக்கையால் நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டிலும், 300 பயணிகள் இங்கே வந்து விளையாடினர் என்றார் அவர்.
உருமுச்சி நகரத்தின் HONG SHAN பூங்காவில், பெய்ஜிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தின் மாதிரியாக தயாரிக்கப்பட்ட 6 மீட்டர் உயரமும் 10 மீட்டர் நீளமும் கொண்ட, பெரிய பனிக் கட்டிச் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பனி விழாக் காலத்தில், பெரிய ரக அரண்மனை விளக்கு கலைக் கண்காட்சியும், பனிக் கட்டிச் சிற்பப் படைப்புக் கண்காட்சியும் தொடங்கியுள்ளன.

இந்த பனிக் கட்டிச் சிற்பக் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 160 படைப்புகள், சின்சியாங்கின் சிறப்பான பழக்கவழக்கங்களையும் மனிதப் பண்பாட்டு வரலாற்றையும் பிரதிபலிக்கின்றன.
வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் குறுகிய காலத்துக்குள் சின்சியாங்கின் பனி உணர்வை போதிய அளவில் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, இவ்வாண்டில், உருமுச்சி நகரம், பனிச் சுற்றுலாக்கான ஐந்து சிறப்பு நெறிகளைத் திறந்து வைத்துள்ளது. இதில், காஷ், தியேன் ச்சி, துருபான் முதலிய புகழ்பெற்ற இயற்கைக் காட்சி தளங்கள் இடம்பெறுகின்றன. உள்ளூரின் தேசிய இன பழக்கவழக்கங்கள் சின்சியாங் குளிர்காலத்தின் சுற்றுலாவை வலிமையாக தூண்டியுள்ளன என்று சின்சியோங் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி CHI CHONG QING கருதினார். அவர் மேலும் கூறியதாவது:
சின்சியாங்கின் குளிர்காலச் சுற்றுலா மூலவளம் நன்றாக இருக்கிறது. இதை, தேசிய இன பழக்கவழக்கம், பட்டுப்பாதை ஆகியவற்றுடன் இணைத்து, அவற்றின் தனிச்சிறப்பியல்பையும் பண்பாட்டையும் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையை வளர்க்க முடியும் என்றார் அவர்.


2002ம் ஆண்டின் குளிர்காலத்தில் உருமுச்சி நகரத்தில் முதலாவது பட்டுப்பாதை பனி விழா நடைபெற்ற பின், சின்சியாங்கின் பனி மற்றும் தேசிய இனச் சுற்றுலா உற்பத்தி பொருட்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குளிர்காலத்தில் உருமுச்சி சென்று பனிச்சறுக்கு செய்வது, பரவலான சுற்றுலா நிகழ்ச்சியாக மாறியுள்ளது. சீனாவின் HE NAN மாநிலத்தின் வழிகாட்டி GUO CHEN அம்மையார் பேசுகையில், குளிர்காலத்தில் உருமுச்சியில் பனியை மகிழ்ச்சியாக பார்ப்பதற்கான செலவு, கோடைக்காலத்தில் இருந்ததை விட சுமார் 30 விழுக்காடு குறைவாகும். இது, மிகவும் மலிவு என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
நான், HE NAN மாநிலத்தின் ZHONG ZHOU சர்வதேசச் சுற்றுலா பணியகத்தில் வேலை செய்கின்றேன். சின்சியாங்கின் சுற்றுலாச் சந்தை நன்றாகவுள்ளது. பயணிகள் வந்து பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைந்தனர். பனிச்சறுக்கலைத் தவிர, தியேன் ச்சி, துருபான் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் பார்க்கலாம். மேம்பாடு உடையது என்று அவர் கருதினார்.
புள்ளிவிபரத்தின் படி, தற்போது, உருமுச்சியில் 30 பனிச்சறுக்கல் திடல்கள் உள்ளன. நாளுக்கு 20 ஆயிரம் பயணிகள் வருகை தருவதை ஏற்றுக்கொள்ளமுடியும். இதில் பட்டுப் பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN GOLF பனிச்சறுக்கல் திடல், TIAN SHAN சர்வதேச பனிச்சறுக்கல் திடல் உள்ளிட்ட பத்துக்கு மேலான பனிச்சறுக்கல் திடல்கள் குறிப்பிடத்தக்க அளவையும் தரத்தையும் கொண்டவை. இவ்வாண்டின் பட்டுப்பாதை பனி விழாவில், உருமுச்சிக்கு வந்து தங்கும் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்து, 10 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்படப்பட்டது.


சீனாவுக்கு வந்தால் தான், உலகின் அளவு தெரியும். உருமுச்சிக்கு சென்றால் மட்டும் தான், சின்சியாங்கின் அழகு தெரியும் என்று மக்கள் பொதுவாக கூறினர். சின்சியாங்கின் அழகான காட்சிகள், கோடைக்காலத்தில் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் காணப்படலாம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உருமுச்சி பட்டுப்பாதை பனி விழா, உலகின் பயணிகளுக்கு பல பங்கேற்பு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. இங்கே, நீங்கள், மேற்குச் சீனாவின் பனிக்காட்சியைப் பார்த்து, வண்ணமான தேசிய இன பழக்கவழக்கங்களை உணர்ந்து கொள்ளலாம்.

லாசாவிருள்ள மீன்பிடிக்கிராம

மீன்பிடி கிராமங்களை, கடலோர பிரதேசங்களில் பார்க்கலாம் என்று பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கருதுகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், லாசாவின் புறநகரில் அமைந்துள்ள மீன்பிடிக்கிராமத்தைப் பற்றி அறிய இருக்கின்றீர்கள்.

Jun ba கிராமம், லாசா ஆற்றின் கீழ்ப்பகுதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. அழகான இயற்கை சுற்றுச்சூழலையும், காட்சிகளையும் கொண்ட இக்கிராமத்தில் ஏரிகள் அதிகம். கடந்த 300 ஆண்டுகளில், இக்கிராமவாசிகள், தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைச்சிறந்த தோல் படகு தயாரிப்பு கலை, தேசிய இன தனிச்சிறப்பியல்புடைய மாட்டு தோல் படகு ஆகியவை, பண்டைய திபெத் இன மீன்பிடிப்புப் பண்பாடுகளாக மாறியுள்ளன.

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரேதசத்தில் உள்ள ஒரேயொரு மீன்பிடிக்கிராம், இதுவாகும். திபெத்தில் நீர் குறைவு என்ற இயற்கையான காரணியை தவிர, பெரும்பாலான திபெத் மக்கள் மீன்கள் உண்பதில்லை என்பது, மீன்பிடித்தல் வளராமல் உள்ளதற்கு, மற்றொரு முக்கிய காரணமாகும்.
மீன் உண்ணும் பழக்கவழக்கம், புத மதத்தால், தடுக்கப்பட்டுள்ளது. திபெத்தில் ஏரிகள், புனித ஏரிகளாக அழைக்கப்படுகின்றன. ஏரிகளில் குளிப்பது அல்லது அதன் மீன்களை உண்பது, புனித ஏரிகளை அசுத்தப்படுத்தும் செயல்பாடுகளாகும். Jun ba கிராமவாசிகள், மீன்பிடித் தொழில் பாரம்பரியத்தைக் கொள்வதற்கான காரணம் என்ன, தெரியுமா?

உள்ளூர் செவிவழி கதைகளின் படி, அவர்கள் மீன் பிடித்து உண்பதற்கு, தெய்வத்தின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, நம்பப்படுகிறது. முதியவரான சோனான் இந்தக்கதை பற்றி கூறியதாவது:
மீன்வகைகளின் வேகமான வளர்ச்சியினால், ஏரிகளில், மிக அதிகமான மீன்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பல மீன்கள், இறக்கைகளை வளர்த்து கொண்டு, வானில் பறந்து, புதிய வாழ்வு இடங்களைத் தேடின. படிப்படியாக, இறக்கைகளை வளர்த்துக் கொள்ளும் மீன் வகைகள், சூரியன் மற்றும் சந்திரனை மறைக்கும் அளவுக்கு மேன்மேலும் அதிகமாகின. உயிரின வகைகள், சூரிய ஒளிக் கிடைக்காததால், வாட தொடங்கின. இந்நிலைமையை தெய்வம் கண்ட பிறகு, Jun ba கிராமவாசிகளுக்கு,

மீன்பிடித்து உண்பதற்கு அனுமதி அளித்தாராம். இதனால், இங்கு மீன்பிடித் தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. கிராமவாசிகள் அனைவரும், மீன்பிடித்து உண்ணும் பழக்கவழக்கத்தை கொண்டுள்ளனர் என்றார் அவர்.
யாருசாம்பு ஆறும் லாசா ஆறும் சங்கமிக்கும் பகுதியில் Jun ba கிராமம், அமைந்துள்ளதால், இங்கு மீன் வகைகள் மிகவும் அதிகம். நீண்டகாலமாக மீன்கள் உண்டுவருவதால், மீன் வறுவல் பலவிதமாக செய்ய, கிராமவாசிகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கும் போது, பாரம்பரிய திபெத் இன உணவு வெண்ணெய் தேனீர், சான்பா என்னும் மாவு உணவுப்பொருள் ஆகியவற்றைச் சுவைப்பதோடு, பல்வேறு மீன் வறுவல்களையும் சாப்பிடலாம். Jun ba கிராமக் குழுத் தலைவர் பாசூ அறிமுகப்படுத்தியதாவது:

இங்கு மீன்களைச் சமைக்கும் வறுவல் வகைகள், மிகவும் அதிகம். பல்வகை மீன் வறுவல்கள் இருக்கின்றன என்றார் அவர்.
Jun ba கிராமவாசிகளின் உற்பத்தியும் வாழ்க்கையும், மீன்பிடித் தொழிலைச் சுற்றியே இருக்கின்றன. அவர்களின் பொழுதுப்போக்கு கூட, மீன்பிடி தொழிலுடன் தொடர்புடையது. Jun ba கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் வெளியேயும், மாட்டு தோல் படகு வைக்கப்பட்டுள்ளதை, பயணிகள் காண முடியும்.

சிறிய சீனா என்னும் காட்சி மண்டலம்

சிறிய சீனா என்னும் நாட்டுப்புற பழக்கவழக்க கிராமம், சீனாவில், பல்வேறு தேசிய இனங்களின் நாட்டுப்புற கலைகள் நடையுடைய பாவனைகள், மக்கள் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை ஒரே பூங்காவில் இணைத்து சேர்க்கும் பெரிய ரக பண்பாட்டு சுற்றுலா காட்சி மண்டலமாகும். இதில், 22 சிறுபான்மை தேசிய

இனங்களைச் சேர்ந்த 25 கிராமங்கள் உள்ளன. நடையுடைய பாவனை நிகழ்ச்சி, நாட்டுப்புற கைவினை கலைப்பொருட்காட்சி, நாட்டுப்புற விழா கொண்டாட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், சீன தேசிய இன கோயில் திருவிழா, நீர் தெளிப்பு விழா, தீப விழா, உள்மங்கோலிய பாவனை வாரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், வெவ்வேறான கோணத்திலிருந்து சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடு காட்சிக்கு வைக்கப்படுகிறது. WANG DAN SHENG அறிமுகப்படுத்தி கூறியதாவது:

கடந்த யுவான் சியேள திருவிழாவில், சீனாவின் விளக்கு புதிர் விழா நடைபெற்றது. பயணிகள், எமது காட்சி மண்டலத்தில் விளக்கு புதிர்களை ஊகித்து விடை கண்டு, இரவில் விளக்கு வண்டிகளைப் பார்வையிட்டனர். இந்நடவடிக்கை, மிகவும் வரவேற்கப்பட்டது. யுவான் சியேள திருவிழா நாளிரவு மட்டும், பயணிகளின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றார் அவர்.
மேன்மேலும் அதிகமான பயணிகள் சீனத் தேசிய இனப் பாரம்பரிய பண்பாட்டில் கவனம் செலுத்துவதை ஈர்க்கும் வகையில், நாட்டுப்புற பழக்கவழக்க கிராமத்தில் ஒவ்வொரு இரவிலும் டிராகன் மற்றும் பீஃனிக்ஸ் நடனம் என்ற பெரிய ரக நிகழ்ச்சி குறிப்பாக நடைபெற்று வருகிறது. பயணி Peng li, இந்தக் காட்சி மண்டலத்தை சுற்றி,

முழு நாளும் பார்வையிட்ட பின், பெண் நண்பருடன் இணைந்து, இந்தக் கலை நிகழ்ச்சியைக் கண்டு களிப்பார். அவர் கூறியதாவது:
இன்று சிறப்பாக வந்து விளையாட்டினார். இங்கு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று, யுவான் சியேள சாப்பிடலாம், கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு ரசிக்கலாம் என்று என் தோழி கூறியதைக் கேட்டறிந்து வந்தோம் என்றார் அவர்.
இந்தக் கலை நிகழ்ச்சியில், சுமார் 10 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான கலைஞர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து

பயன்படுத்தப்பட்டுள்ளது. நடனம், கலைக்கூத்துக்கலை, மாயவித்தை முதலிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உய்கூர், பெய், சுவாங், திபெத் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த சுமார் 500 கலைஞர்கள், 55 நிமிட நேரத்தில், பயணிகளுக்கு தேசிய இன பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றனர்.
இனி, சுற்றுலா தகவல்கள்
இந்த நாட்டுப்புற பழக்கவழக்க கிராமத்தின் நுழைவுச்சீட்டு, 120 யுவானாகும். முழு காட்சி மண்டலத்தையும் பார்வையிடுவதற்கு, ஒரு முழு நாள் தேவை. அதன் சுற்றுப்புறத்திலுள்ள உலக சன்னல், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு ஆகிய காட்சி இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

Jun ba மீன்பிடி கிராமம்

Jun ba கிராமம், லாசா ஆற்றின் கீழ்ப்பகுதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. அழகான இயற்கை சுற்றுச்சூழலையும், காட்சிகளையும் கொண்ட இக்கிராமத்தில் ஏரிகள் அதிகம். கடந்த 300 ஆண்டுகளில், இக்கிராமவாசிகள், தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைச்சிறந்த தோல் படகு தயாரிப்பு கலை, தேசிய இன தனிச்சிறப்பியல்புடைய மாட்டு தோல் படகு ஆகியவை, பண்டைய திபெத் இன மீன்பிடிப்புப் பண்பாடுகளாக மாறியுள்ளன.

முன்பு, Jun ba கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. அப்போது, மாட்டுத் தோல் படகு தான், முக்கியமான போக்குவரத்து வசதியாக இருந்தது. தற்போது, அவை, மீன்பிடிப்பதற்கு வசதியான கருதியாக மட்டுமல்ல, நடனத்தில் பயன்படுத்தப்படும் கருவியாகவும் இருக்கின்றன. மாட்டுத் தோல் படகு நடனம், திபெத் மொழியில் குவோ சி என்று அழைக்கப்பட்டது. குவோ என்றால், மாட்டுத் தோல் படகு என்று பொருள். சி என்றால், நடனம் ஆகும். கிராமவாசிகள், படகு ஓட்டும் பாடலை பாடி, மாட்டுத் தோல் படகைக் கொண்டு நடனம் ஆடினார்கள். உள்ளூர் பழக்கவழக்கத்தின் படி, ஆண்டுதோறும் திபெத் நாட்காட்டியின் படி, மார்ச் திங்கள் மீன்பிடிப்பு விழாவில், இந்நடனங்களைக் கண்டு ரசிக்கலாம். தற்போது, மாட்டுத் தோல் படகு நடனம், ஒரு வகை பொழுதுப்போக்கு நிகழ்ச்சியாக மாறியுள்ளது. பொதுவாக, கிராமவாசிகள் பெரும்பாலான நேரத்தில், மாட்டுத் தோல் படகுகளை ஓட்டி மீன் பிடிக்கின்றனர். ஓய்வு நேரத்தில், தனிச்சிறப்பு மிக்க மாட்டுத் தோல் படகு நடனம் ஆடுகின்றனர். விருந்தோம்பல் மிக்க கிராமவாசிகள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கிணங்க, இந்நடனங்களை ஆடி மகிழ்விக்கின்றனர்.

மீன்பிடித்தொழில் தவிர, தோல் பொருட்கள் பதனீட்டுத் தொழில், இக்கிராமத்தில் வளர்ச்சியடைகிறது. இங்குள்ள மாட்டுத் தோல் சிறு படகு, பைகள், செல்லிடபேசிக்கான சிறிய உறைகள், தேயிலை பைகள் உள்ளிட்ட தோல் கலைப்பொருட்கள் மிகவும் சிறப்பானவை. திபெத் இன தனிச்சிறப்பியல்பு, மலிவான விலை ஆகியவற்றினால், இந்தத் தொல் கலைப்பொருட்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் வரவேற்கப்படுகின்றன.
முதியவரான சோனான், இந்தக் கலைப்பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடுகின்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:

தோல் பைகள், செல்லிடபேசிக்கான சிறிய உறைகள் முதலியவற்றை தயாரிக்கலாம். அரசின் உதவியுடன், எமது கிராமத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாக இருப்பதால் நாங்கள் மீனவர் குடும்பத்தின் மகிழ்ச்சி எனும் சிறு ஹோட்டல் நடத்துகின்றோம். எங்களின் வாழ்க்கை நிலை, முன்பை விட நன்றாக இருக்கிறது என்றார் அவர்.
லீன்க்கா என்பது, திபெத் இன மக்களின் முக்கிய பொழுதுப்போக்காகும். திபெத் மொழியில், லீன்க்கா என்றால், பூங்கா என்று பொருள். லீன்க்கா செல்வது என்பது, பூங்கா போன்ற இடங்களில் விளையாடுவது என்று பொருள்படுகிறது. பயணிகள், Jun ba கிராமத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, லீன்க்கா நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். இதில், உள்ளூர் மீனவர்களின் தனிச்சிறப்பியல்புடைய ஆடல்பாடல் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதோடு, அவர்களுடைய பொழுதுப்போக்கு நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளலாம்.

ஹாங்சோவின் HE FANG வீதி

சீனாவின் பல நகரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உடையுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், பண்டைகால நகரான ஹாங்சோவின் மூலம், சீனாவின் முற்கால பண்பாட்டை உணர்ந்து கொள்ளலாமா.

2200 ஆண்டுகள் வரலாறுடைய ஹாங்சோ, சீனாவின் தென்கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. சீனர்களின் பார்வையில், இது மிக அழகான நகரமாகும். இன்று, ஹாங்சோவின் HE FANG வீதி பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் கலைமகள்.
ஹாங்சோவின் மிக புகழ்பெற்ற மலையான வூ சான் மலையின் கீழுள்ள HE FANG வீதி, ஹாங்சோவின் வரலாறு மற்றும் பண்பாட்டை நன்றாக வெளிப்படுத்தும் வீதிகளில் ஒன்றாகும். உலக வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்தின் பட்டியலில் சேரப்பட, சி ஹூ ஏரியின் விண்ணப்பத்தின் மிக முக்கிய பகுதியாகவும் இது உள்ளது.
இவ்வீதி, 460 மீட்டர் நீளமானது. 12 மீட்டர் அகலமும் கொண்டது. 880 ஆண்டுகளுக்கு முந்திய தென் சூங் வம்ச காலத்தில், ஹாங்சோ நகரம், தலைநகரமாக இருந்தது. அப்போதைய பண்பாட்டு மற்றும் பொருளாதார வர்த்தக மையமான HE FANG வீதி, கோலாகலமாக இருந்தது. தற்போது, இவ்வீதியில், சில பண்டைகால கட்டிடங்கள் தான் உள்ளன. இரு பக்கங்களிலுள்ள வீடுகளில், வணிகத்துறை, மருந்துத்துறை, நாட்டுப்புற

கலைத்துறைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வீதியின் நிர்வாகக் குழுவின் அதிகாரி Shan xian ping அம்மையார் கூறியதாவது:
வேறுபட்ட பருவ காலங்களில், எமது வீதியில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் பாரம்பரிய பண்பாடும் பழக்கவழக்கங்களும் காணப்படலாம். பயணிகள் வீதியில் நடக்கின்ற போதே, பண்பாடு உள்ளிட்ட பலவற்றை உணர்ந்து கொள்ளலாம் என்றார் அவர்.
HE FANG வீதியில், சில தேனீர் கடைகள் உள்ளன. விருந்தினர்களுக்கு தேனீரை வழங்கும் சேவகர்கள், பண்டைக்கால பாணியிலான மேலாடையை அணிந்து, வெண்கலத் தேநீர் கெண்டியைக் கொண்டிருக்கின்றனர். துணி கலைப்பொருட்கள் கடையின் உரிமையாளர், பழைய நெசவு வசதிகளைப் பயன்படுத்தி, கைவினை நெசவுப் பொருட்களைத் தயாரிக்கின்றார். சீனியை விற்பனை செய்யும் ஆண், அலங்கார மேலாடை அணிந்து, வாடிக்கைகாரர்களை கவர்கின்றார்.

இவ்வீதியின் நுழைவாயிலில், வெண்கல மிலெ புத்தர் சிலை இருக்கிறது. அதில், நூற்றுக்கு அதிகமான குழந்தை சிலைகளும் இருக்கின்றன. இது, சமகாலத்தில் புகழ்பெற்ற வெண்கல சிற்ப கலை வல்லுனர் சூ பிங்யிவானின் படைப்பு ஆகும். பல பயணிகள் அச்சிலையுடன் நிழற்படங்கள் எடுத்துக்கொள்வதோடு, மிலெ புத்தரைப் போன்று அடிக்கடி சிரியாக இருக்க விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியில், Hu qing yu tang என்னும் மிகவும் புகழ்பெற்ற மருந்து கடை இருக்கிறது. 1874ம் ஆண்டில், அப்போதைய புகழ்பெற்ற வணிகர் Hu xun yan திறந்து வைத்த இம்மருந்து கடையின் பரப்பளப்பு, சுமார் நான்கு ஆயிரம் சதுர மீட்டராகும். சீனாவில் ஒப்பீட்டளவில் முழுமையான சிங் வம்சகாலத்தின் ஹுய் பிரிவைச் சேர்ந்த கட்டிடம் இதுவாகும்.

தலைச்சிறந்த சிறப்பியல்புகள் கொண்ட கட்டிடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, HE FANG வீதியில் சுமார் நூறுக்கு மேற்பட்ட வகைகளான சிற்றுண்டிகளைச் சாப்பிடலாம். நான்சூங் வம்சக்காலத்தின் சிற்றுண்டிகள், சந்திர கேக், தாமரை வேர்த் தண்டு மாவு முதலியவை இடம்பெறுகின்றன.
சிற்றுண்டிகளைச் சுவைத்தப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் கவனம், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்படுகிறது. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, இவ்வீதியில் காணப்படும் காட்சிகளில் ஒன்றாகும். சீனிச் சிலையைத் தயாரிக்கின்றநரான முதியோர் Ji changyiக்கு, 75 வயதாகிறது. அவர் ஓய்வு பெற்றுள்ளார். HE FANG வீதியின் நிர்வாகக் குழுவின் தலைவர், சீனிச் சிலைகள் தயாரித்து, காட்சிக்கு வைக்க, அவருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது:
நான் குழந்தை பருவ காலத்திலிருந்து சீனிச்சிலையைத் தயாரிக்கத் துவங்கினேன். நூற்றுக்கணக்கான வகை வடிவங்களை, இதில், தயாரிக்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல, வெளிநாட்டவரும் இதை விரும்பி வாங்குகின்றனர் என்றார் அவர்.

உயிரினப் பாதுகாப்பில் கட்டுமானத்தில் அதிக சாதனைகள் பெற்ற சீனாவின் ஹய்னான் மாநிலம் (அ)

ஹய்னான் மாநிலம், சீனாவின் பூங்கா என கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு இம்மாநிலத்தின் காட்டுப் பரப்பின் விகிதம் 57 விழுக்காட்டைத் தாண்டியது. நாட்டின் சராசரி விகிதத்தை விட, இது, 2 மடங்கு அதிகமாகும். இம்மாநிலத்தில், 8 வனப் பூங்காக்களும், 69 இயற்கை பாதுகாப்புப் பிரதேசங்களும் இருக்கின்றன. பொருளாதாரம் விரைவாக வளரும் போதிலும் சிறந்த உயிரின வாழ்க்கை சூழலையும் ஹய்னான் மாநிலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

1999ம் ஆண்டு, ஹய்னான் மாநிலத்தை, சீனாவில் முதலாவது

உயிரினப் பதுகாப்பு மாநிலமாக கட்டியமைக்கும் பணி தொடங்கியது. 2007ம் ஆண்டு, உயிரினப் பாதுகாப்பைப் பயன்படுத்தி மாநிலத்தை வளர்ப்பது என்ற தி்ட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஹய்னான் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த பணியகத்தின் துணை தலைவர் zhu yunshan கூறியதாவது,

ஹய்னானின் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தே ஆக வேண்டும். இது, இம்மாநிலத்தின் தொடரவல்ல வளர்ச்சியின் முதன்மை கோரிக்கையாகும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமை. மூலவளங்களை சீர்குலைக்காமை. தாழ்ந்த நிலையிலான கட்டுமானம் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படாமை ஆகிய 3 கோட்பாடுகளைக் கடைப்பிடித்து, இக்கோட்பாடுகளின் அடிப்படையில் ஹய்னான் தனது வளர்ச்சியின் போக்கில் தொழிற்துறையை வளர்க்கிறது.

ஹய்னானின் மத்திய பகுதியில் அமைகின்ற மலை பிரதேசம், சிறந்த உயிரின வாழ்க்கை சுற்றுச் சூழல்லைப் பேணிகாக்கும் மையப் பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் உயிரின வாழ்க்கை ச்சூழலுக்கு ஈடு செய்யும் ஆற்றலை ஹய்னான் அரசு வலுப்படுத்தியுள்ளது என்று zhu yunshan வெளிப்படுத்தினார்.

வெப்ப மண்டல சதுப்பு நில காடு, ஹய்னான் மைய பிரதேசத்தில் காணப்படுகிறது. இது, ஹய்னானின் நுரையீரலாகும். உள்ளூர் மக்களை ,மத்திய பகுதியின் உயிரின வாழ்க்கைச்சூழலைப் பாதுகாக்கச் செய்யும் அதே வேளையில், இப்பிரதேச மக்களின் வாழ்க்கை நிலையையும் ஹய்னான் அரசு மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, சிறப்பு மிக்க வேளாண்துறையையும் சுற்றுலா தொழிலையும் வளர்க்க வேண்டும்.

வெப்ப மண்டல வேளாண்மையை வளர்ப்பது, ஹயினான் மாநிலத்தின் பொருளாதார உத்திகளில் ஒன்றாகும். வேளாண் உற்பத்தியில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தையும் ஹய்னான் அரசு பெரிதும் பரவல் செய்து வருகிறது. இங்குள்ள chengmai மாவட்டம், சீனாவின் மிகப் பெரிய 10 வேளாண் மாவட்டங்களில் ஒன்றாகும். வெகுகாலத்துக்கு முன்பே, ஹய்னான் உயிரின வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்ற வேளாண் துறையை இங்கு உருவாக்கியுள்ளது. கரிம உரங்களைப் பயன்படுத்தும் விகிதமும், மீத்தேன் வாயுப் பயன்பாட்டு பரப்பின் விகிதமும், சீனாவில் முன்னேறிய நிலையில் இருக்கின்றன என்று இம்மாவட்டத்தின் தலைவர் 杨思涛 கூறினார்.

ஹய்னானில் ஆண்டு முழுவதிலும் தாவரங்கள் பசுமையாக காணப்படுகின்றன. கரிம உரங்களைத் திரட்டி சேமிப்பது, எளிதானது. மாநிலக் கட்சி கமிட்டியும் அரசும் வட்டாரம், மீத்தேன் வாயுவின் பயன்பாட்டை பரவலாக்கி வருகிறது. இது, விவசாயிகளுக்கான எரியாற்றல் பிரச்சினையைத் தீர்த்த அதே வேளையில், பல கரிம உரங்களையும் உற்பத்தி செய்ய உதவிகிறது.