பெய்ஜிங், கோலாகலமான பரபரப்பான மாநகரமாக இருக்கிறது. இங்கு அமைதியான பண்டைகால வரலாற்று புகழ்பெற்ற இடங்கள் பல, உள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், பெய்ஜிங்கின் மேற்கு புறநகரத்திலுள்ள தா ச்சியே கோயிலை பற்றி அறிந்து உலா வருவோமா!
மேற்கு பெய்ஜிங்கிலுள்ள புகழ்பெற்ற காட்சி இடமான கோடைக்கால மாளிகையிலிருந்து கார் மூலம் பத்து நிமிடம் நேரத்தில், மேற்கு மலையிலுள்ள தா ச்சியே கோயிலுக்கு சென்று விடலாம்.
இக்கோயில், 1068ம் ஆண்டு லியேள வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டதால், இதுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடையது. லியேள வம்சக்காலக் கல்வெட்டுகள், மிங் வம்சக்காலக் கட்டிடங்கள், சிங் வம்சக்கால அரசர்களின் கை எழுத்துக்கள் உள்ளிட்ட வரலாற்றுத் தொல்பொருட்கள், இக்கோயிலெங்கும் காணப்படுகின்றன. தா ச்சியே கோயிலிலுள்ள ஒவ்வொரு புல் மற்றும் மரத்துக்கும், வரலாற்றினால் உயர் தன்மையை வழங்கப்படுகின்றன. இது நோக்கிய வண்ணம் அமைந்திருக்கும் திசை கூட, குறிப்பிடத்தக்கது. சீன புத்த மத சங்கத்தின் நிர்வாக அவை உறுப்பினரும், தா ச்சியே கோயிலின் புத்த மதப் பண்பாட்டு தலைமை ஆலோசகருமான, புத்த மதப்பெரியார் YAN ZANG கூறியதாவது:
இக்கோயில், கிழக்கு திசையை நோக்கியது. ஒவ்வொரு நாள் காலையிலும், முதன்முதலில் பார்க்கக்கூடிய சூரிய ஒளி, எமது தேசத்துக்கு விரும்பியதைக் கொண்டு வரும். அதனால், இந்த தனிச்சிறப்பான கட்டிடம், இவ்வாறு நிறுவப்பட்டது. சீனாவில், பாரம்பரிய கட்டிடங்கள், பொதுவாக தெற்கு திசையை நோக்கியே கட்டியமைக்கப்பட்டன. தா ச்சியே கோயிலின் இந்த சிறப்பான கட்டிடம் என்பது, சீனாவின் பண்பாடு, பல துருவங்களின் இணக்கமாகவும் இருப்பதைப் பிரதிபலித்துள்ளது என்றார் அவர்.
மலையில் கட்டிடமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கட்டிடங்களுக்கு இடையே, கிழக்கிலிருந்து மேற்கு வரை, நான்கு மட்ட முற்றங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை, சிங் வம்சக்காலத்தில் செப்பனிட்டுக் கட்டியமைக்கப்பட்டவை. கோயிலின் பிற்பகுதியில் ஒரு சிறப்பான பூங்கா உள்ளது. அருமையான சுற்றுச் சூழலுடைய தா ச்சியே கோயில், மலைகளால் சுற்றிவளைக்கப்பட்ட சூழலில் உள்ளது. ஓர் ஊற்று நீர் மலையின் உச்சியிலிருந்து கோயிலின் முற்பகுதியிலுள்ள மலை இடுக்கு வழியாக சலசலவென்று, ஓடி வருகிறது.
இக்கோயிலிலுள்ள பண்டைக்கால கட்டிடங்களும், அருமையான சுற்றுச்சூழலும், சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றின் மூலம், உயிர் ஆற்றல் நிறைந்து விட்டதாக உள்ளது. பெரியார் YAN ZANG கூறியதாவது:
தா ச்சியே கோயில், லியேள, மிங் மற்றும் ச்சிங் வம்சகாலங்களைக் கடந்து விட்டது. வம்சகாலங்களும் வரலாறும் மாறியிருந்த போதிலும், இக்கோயில், உயிரான பண்பாட்டுப் புதை படிவமாக, உயிராற்றல் நிறைந்து இருந்திருக்கும். இதில் உள்ளார்ந்த கீழை நாடுகளின் ஞானமும், சீனத் தேசத்தின் அயரா உழைப்பு, துணிவு, அமைதி ஆகிய எழுச்சியும், யூ லன் மலரைப் போன்று மலர்கின்றன என்றார் அவர்.
Thursday, 8 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment