Tuesday 19 September 2023
Tuesday 13 August 2013
Tuesday 21 October 2008
பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர்
20.10.08 பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர் |
கேரள மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த பகுதி திருச்சூர். கேரளத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாரம்பரியப் பெருமை கொண்டது. சக்தன் தம்புரான் என அழைக்கப்பட்ட ராஜா ராம வர்மாவால் செதுக்கப்பட்ட ஊரான திருச்சூரில் ரசிக்கவும் இடங்கள் உண்டு. தரிசிக்கவும் தலங்கள் பல உண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்: திருச்சூர் என்றதும் பக்தர்களிடம் ஒரு பரவசம் ஏற்படும். "என்டே குருவாயூரப்பா..." என உதடுகள் உச்சரிக்கத் தொடங்கி விடும். காரணம், திருச்சூர் அருகே குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற ஷ்ரீகிருஷ்ணர் கோவில்தான். திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமையப் பெற்றுள்ள குருவாயூர் ஷ்ரீகிருஷ்ணன் கோவிலை குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் 33.5 மீட்டர் உயரத்துக்கு தங்கத்தகடுகள் வேயப்பட்ட கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. 13 அடுக்குகளுடன் கூடிய 7 மீட்டர் உயரம் கொண்ட தீபத்தூண் ஒன்றும் பக்தர்களை கவர்ந்து வருகிறது. கோவிலின் கருவறையில் குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். குருவாயூரப்பனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். சாவக்காடு பீச்: குருவாயூரில் தரிசிக்க குருவாயூரப்பன் கோவில் என்றால் ரசித்து மகிழ சாவக்காடு பீச் எனக்கூறலாம். விரிந்து பரந்து கிடக்கிறது சாவக்காடு கடற்கரை. இங்கு 100அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சிரமம் பார்க்காமல் 145 படிகளில் ஏறிச்சென்று மேலிருந்து பார்த்தால்...இறங்கி வர மனமிருக்காது. சாம்பல் நிறத்தில் விரிந்து கிடக்கும் கடலையும், கூட்டம் கூட்டமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தென்னைமரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே...யிருக்கலாம். பாலையூர் சர்ச்: குருவாயூரில் பாலையூர் என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ள கத்தோலிக்க சிரியன் சர்ச் பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இது புனித தாமஸால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம். இங்கு ஆண்டு தோறும் ஜுலை மாதம் கொண்டாடப்படும் விருந்து விழாவில் பல மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள். கொடுங்ஙல்லூர்: அரபிக்கடலில் பெரியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பகுதியான கொடுங்ஙல்லூர் மிகவும் பழமைவாய்ந்த ஒரு இடம். யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலநாட்டு வியாபாரிகள் வர்த்தகம் செய்த இடமாக கருதப்படுகிறது. சேரமான் ஜும்மா மசூதி: கொடுங்ஙல்லூர் பகுதியில் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் சேரமான் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இது கி.பி.629ம் நிர்மாணிக்கப்பட்ட பழமையாக மசூதி ஆகும். சாலக்குடி: திருவிதாங்கூர் நெடுங்கோட்டையை திப்புசுல்தான் முற்றுகையிட்டு தளம் அமைத்ததாக கூறப்படும் இடம்தான் சாலக்குடி. திருச்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகள், மரங்கள் சூழ்ந்த பச்சைப்பசேல் பகுதி. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிரப்பள்ளி அருவி: சாலக்குடியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி அருவி. இது பெயருக்கு ஏற்றாற்போல ச்சும்மா...அதிர வைக்கும் அருவிதான். 80 அடி உயரத்தில் இருந்து பேரிரைச்சலுடன் விழும் அருவி, அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அருவி விழுவதால் புகை மண்டலமாய் எழும் சாரல், நம் மேனியை தழுவி ஜில்லிட வைக்கிறது. இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் அதிரப்பள்ளி அருவியை சுட்டுத்தள்ளாத சினிமா காமிராக்கள் மிகமிகக் குறைவு. புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அதிரப்பள்ளி அருவி அழகுத் தாண்டவம் ஆடியிருக்கிறது. இவை தவிர திருச்சூரில் உள்ள கேரள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, திருப்ரயார் கோவில், திருவம்பாடி மற்றும் பாறமெக்காவு கோவில்கள், பீச்சி அணைக்கட்டு மற்றும் சரணாலயம், கதகளி நடனம் கற்றுத்தரும் செருதுருத்தி கேரள கலா மண்டலம் என திருச்சூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. திருச்சூர் பூரம் திருவிழா: கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவும் ஒன்று. இங்குள்ள வடக்குநாதன் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க, எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட, அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும் திருவிழா வேறெங்கிலும் காண முடியாத அரிய திருவிழா. மலையாள மாதமான மேடா மாதத்தில் (ஏப்ரல்- மே) சிறப்பு மிக்க பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. உணவு, தங்குமிடம், போக்குவரத்து: உணவு வசதிகளைப் பொறுத்தவரை திருச்சூர் பகுதியில் நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் ரயில் நிலையமும் திருச்சூரில் இருக்கிறது. திருச்சூருக்கு அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது. "திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..." |
Sunday 12 October 2008
india tamilnadu thanjavur
River Tamiraparani , Ambasamudram: Legal Sand Quarrying ?
Thiruvannaamalai Temple Tower (Tamilnadu, India)
chennai2
Suchindram Tample, Kanyakumari, TamilNadu, IN
India Kanyakumari Tamilnadu
Tiruvalluvar statue, kanyakumari, tamilnadu, IN
தமிழ்நாட்டின் தலைநகரம்
தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. 1639ம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகள் பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர்
அப்போதைய விஜயநகர பேரரசரிடம் இருந்து வாணிபத்துக்காக குத்தகைக்கு எடுத்த நிலப்பகுதிதான் இப்போது ஹைடெக் சிட்டியாக, இந்தியாவின் நான்காவது பெருநகரமாக எழுந்து நிற்கும் சென்னை. வங்கக்கடலின் கரையில் சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிந்து நிற்கும் சென்னை, தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது.
சென்னையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்:
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
வங்காள விரிகுடா கடலோரத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினரால் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை தற்போது தமிழக அரசின் தலைமைச்செயலமாக செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றம் இங்குதான் கூடுகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக கோட்டை திகழ்கிறது. கோட்டையில் ஒரு மியூசியமும் உண்டு. இங்குள்ள ஆயுதங்கள், நாணயங்கள், ஆடைகள் போன்றவை பழங்காலத்து கலாச்சாரத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.
மெரீனா கடற்கரை
சென்னையின் அடையாளம். உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பது போன்ற சிறப்புக்கள் மெரீனாவுக்கு உண்டு. காலாற நடந்தால் கவிதை பாடத்தூண்டும் அழகான கடற்கரையிது. இங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள் இவர்களது சகாப்தத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது மேலும் மெரீனா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் பேலஸ், மாநிலக்கல்லூரி போன்றவை கட்டிடக்கலையை கடைவிரித்து காட்டுகிறது. மெரீனாவின் தென்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சாந்தோம் தேவாலயமும் வரலாற்றை சொல்கிறது.
ஐகோர்ட்
உலகில் பெரிய நீதிமன்ற வளாகங்களில் சென்னை ஐகோர்ட் கட்டிடமும் ஒன்று. 1892ம் ஆண்டில் கட்டப்பட்டது. கோட்டை போன்ற அழகான இந்த சிவப்பு நிற கட்டிடம் சென்னையின் இன்னொரு அடையாளம். பாரிமுனையையையொட்டி இது அமைந்துள்ளது.
ரிப்பன் பில்டிங்
கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் ரிப்பன் என்பவரின் பெயரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் சென்னை மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பளீரென எழுந்து நிற்கும் ரிப்பன் கட்டிடம், அக்கால கட்டிடக் கலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கன்னிமாரா நூலகம்
எழும்பூரில் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம், தேசிய கலைக்கூடம், கன்னிமாரா நூலகம் ஆகியவை வியக்க வைக்கிறது. 1857ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 16-18ம் நூற்றாண்டின் கலைப்படைப்புகளை கொண்டுள்ள தேசிய கலைக்கூடம் போன்றவை பழமையை ரசிப்பவர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் விருந்தளிக்கும். பழமை வாய்ந்த மிகப்பெரிய கன்னிமாரா நூலகம் புத்தகம் வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும்.
மாமல்லபுரம்
பல்லவர் காலத்து கலைகளுக்கு காலத்தால் அழியாத சான்றாக எழுந்து நிற்பது மாமல்லபுரம். சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 7-8ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்கள் உருவாக்கிய குகைக்கோயில்கள், செதுக்கி வைத்த சிற்பங்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.
இவை தவிர பழமையான தேவாலாயம் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மலை, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூரில் அமைந்துள்ள நாட்டியக்கலைக்கூடமான கலாஷேத்ரா, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள வானவியல் அறிவுக்கு தீனி போடும் பிர்லா கோளரங்கம், கிண்டி தேசியப் பூங்கா என ரசிக்கவும் வியக்கவும் வைக்க பல இடங்கள் உள்ளன.
இது மட்டுமின்றி கேளிக்கை பிரியர்களுக்காக தாம்பரம், பூந்தமல்லி அருகிலும், மாமல்லபுரம் செல்லும் வழியிலும் பல கேளிக்கை பூங்காக்கள் அமைந்துள்ளன.சென்னையில் இருந்து சுமார் 36 கி,மீ தூரத்தில் இயற்கை அழகு கொட்டும் முட்டுக்காடு, சுமார் 85 கி.மீ தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவற்றுக்கும் சென்று வரலாம். வேடந்தாங்கலில் நவம்பர் முதல் மார்ச் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகளை ரசிக்கலாம்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து
சென்னை, பலவகை கலாச்சாரத்தின் தலைநகரம் என்பதால் தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் தாராளமாகவும் தரமாகவும் கிடைக்கிறது. தங்கும் வசதியைப் பொறுத்தவரை பட்ஜெட் கிளாஸ், 3ஸ்டார், 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்கள் நிறைய உள்ளன. ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் உள்ளன. கடல் வழியாகவும் வரலாம். தரைமார்க்கமாக சென்னைக்குள் வர சிறப்பான சாலை வசதிகளும் உள்ளன.
ஓ:கே. முடிவு பண்ணிட்டீங்களா?, சென்னை எப்போதும் சிங்காரச்சென்னைதான். வெல்கம் டூ சென்னை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மத்திய ரெயில் நிலையம், சென்னையின் இடப்புள்ளிகளில் ஒன்று (ONE OF LAND MARK,) பிரபல கட்டட வடிவமைப்பாளர் கென்றி இர்வின் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது
1856 ஆம் வருடம் , தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது ரெயில் நிலையம் இதுதான்.
1856 ஆம் வருடம் , தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது ரெயில் நிலையம் இதுதான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மயிலாப்பூர் கபாலேஷ்வரர் ஆலயம்
மயிலாப்பூர் கபாலேஷ்வரர் ஆலயம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை ரெயில் பயணம்
சென்னை ரெயில் பயணம்
Subscribe to:
Posts (Atom)